TamilSaaga

சிங்கப்பூரில் அண்ணன் வாங்கிய லாரிக்கு கடன் கையெழுத்து போட்ட தம்பி.. வாழ்க்கையை தொலைத்த கொடுமை! – எச்சரிக்கும் உண்மை சம்பவம்

சிங்கப்பூரில் நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த உண்மை சம்பவம் ஒரு உதாரணம்.

சில வருடங்களுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சொந்தமாக லாரி வாங்க முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். லாரி வாங்க ஓரளவு மட்டுமே அவரால் பணம் திரட்ட முடிந்தது.

மீதி பணத்திற்கு லோன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை குடும்பத்தாரிடம் தெரிவித்த ராஜன், தனது தம்பி விக்னேஷிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) Security Sign போடுமாறு கேட்டிருக்கிறார். அண்ணன் தானே அவரும் கேட்ட இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டு போட்டிருக்கிறார்.

ஆனால், எதிர்பார்த்த அளவு ராஜனின் லாரி பிஸ்னஸ் சரிவர செயல்படவில்லை. இருக்க இருக்க நிலைமை மோசமாகிக் கொண்டிருந்த நிலையில், பேரிடியாக வாங்கிய லாரி விபத்தில் சிக்கியது. இதனால் லாரியை வாங்கிய ராஜனை விட, Security கையெழுத்து போட்ட விக்னேஷ் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்.

Security Sign போட்டதால், கடன் முழுவதும் முடியும் வரை இந்தியா திரும்ப முடியாத வகையில், விக்னேஷின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. கடன் முழுவதையும் கட்டினால் தான் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று அதிகாரிகள் கறாராக தெரிவிக்க விக்னேஷ் நிலைகுலைந்து போனார்.

சரியாக 3 வருடங்கள், அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஏனெனில், அண்ணன் லாரிக்காக வாங்கிய கடன் முழுவதையும் அடைக்க விக்னேஷுக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட 36 மாதங்கள் சிங்கப்பூரில் இரவும் பகலுமாக பணியாற்றி, லாரி கடனை அடைத்தார். இதன் பிறகு அவரது பாஸ்போர்ட் முடக்கம் நீக்கப்பட, 3 வருடங்கள் கழித்து தான் அவர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாது.

சிங்கப்பூரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு கடுமையானவை. நீங்கள் சிங்கப்பூரில் எந்த பிரச்சனையிலாவது சிக்கி, உங்கள் பாஸ்போர்ட் முடக்கப்பட்டால் நீங்கள் தலைகீழ் நின்றாலும், அந்த பிரச்சனை சால்வ் செய்யப்படும் வரை பாஸ்போர்ட் கிடைக்காது. முடக்க காலம் முழுவதும் உங்களால் சிங்கப்பூரை விட்டு வெளியே செல்லவே முடியாது.

அண்ணன் என்றாலும், தம்பி என்றாலும் சிங்கப்பூரில் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு முன்பு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். அதன் பின்விளைவை முழுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகு ஈடுபடுங்கள். இல்லையெனில், விளைவு சற்று மோசமாகவே இருக்கும்.

Content Source: Nandana Travels, Trichy

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts