சிங்கப்பூரில் வேலைக்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் பல வழிகளை கையில் எடுத்து தொடர்ந்து அதற்கான தேடலில் இருப்பார்கள். ஒரு நல்ல வழி கிடைத்தால் போதும் என்பவர்களுக்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை தான் எடுத்து வந்திருக்கிறோம்.
வேலைக்காக TWP பாஸில் உங்களால் சிங்கப்பூர் வர முடியும். இதற்கு விசா கட்டணமாக 1.20 லட்ச ரூபாய் வரை ஏஜென்சி கட்டணமாக வசூல் செய்து வருகிறார்கள். Training Work Permitல் சிங்கப்பூர் வந்தால் சரியாக 6 மாதம் மட்டுமே உங்களால் இங்கு இருக்க முடியும். அதற்குள் வொர்க் பெர்மிட் அல்லது S-Passக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால் இதற்கு நீங்கள் வேலை செய்து வரும் கம்பெனி ஒப்புக்கொள்ள வேண்டும்.
சரி TWP பாஸில் சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் இங்கையே S Passக்கு மாறிக்கொள்ளலாம். இதற்கு trans letter தேவைப்படாது என்றாலும் நீங்கள் வேலை செய்யும் கம்பெனி இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். புதிய கம்பெனியும் ஏற்றுக்கொள்வது முக்கியம்.
இதுவே சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம் என்றால் அவர்களும் அடிக்கலாம் தான். ஆனால் டெஸ்ட் அடிக்க அங்குள்ள சென்டர்களுக்கு செல்ல வேலை பார்க்கும் நிறுவனம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒப்புதல் இல்லாமல் உங்களால் டெஸ்ட் அடிக்க முடியாது. அதுப்போல ஒரு சில கம்பெனிகள் construction மற்றும் service என இரு துறைகளும் வைத்திருப்பார்கள். இந்த கம்பெனிகளில் வேலைக்கு சென்றிருந்தால் TWPல் இருந்து உங்களால் டெஸ்ட் அடித்து வொர்க் பெர்மிட்டுக்கு மாறிக்கொள்ள முடியும்.
அதுவே நீங்கள் போன கம்பெனியில் சர்வீஸ் மட்டுமே இருந்தால் Skilled test அடித்தாலும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா சென்று தான் மீண்டும் இங்கு வர முடியும். சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது இந்தியாவில் இருந்து பெரிதாக வேறுபடும். 4 அல்லது 5 நாட்களுக்குள் உங்களுக்கு எல்லா processம் முடிந்து விடும்.
கட்டணமும் அதிகபட்சமாகவே 80 ஆயிரத்திற்குள் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக சில கம்பெனிகள் தொழிலாளர்களின் வேலை பிடிக்கும் பட்சத்தில் அவர்களை நேரடியாக டெஸ்ட் அடிக்க அனுப்புவார்கள். S-Passக்கும் மாற்றி தருவார்கள். இதில் S-Passக்கு மாற உங்களிடம் டிகிரி அல்லது டிப்ளமோ இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனாலும் இது சிலருக்கும் நடக்காமல் போகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாமே நீங்கள் வேலைக்கு செல்லும் கம்பெனியின் கையில் தான் இருக்கிறது.