TamilSaaga

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்படும் : ஆனால் இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி… யாருக்கு? – அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிக்கை

சிங்கப்பூரில் அடுத்த மாத தொடக்கத்தில் சில COVID-19 கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. வைரஸுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் தளர்த்துவது “மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட” தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இன்று (ஜூலை 26) பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வழங்கிய திரு வோங், ஆகஸ்ட் தொடக்கத்தில் இரண்டாம் கட்டத்தின் (உச்ச எச்சரிக்கை) மத்தியில் பணிக்குழு ஒட்டுமொத்த தொற்று நிலைமையை மதிப்பீடு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்பாக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு தவணைகளை பெற்றிருப்பார்கள் என்று நிதியமைச்சராக இருக்கும் திரு வோங் கூறினார்.

“எனவே சமூக தோற்று கட்டுப்பாட்டில் இருந்தால், மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் குறைவாக இருந்தால், தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகளை நாங்கள் எளிதாக்க முடியும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஆனால் கட்டுப்பாடு எளிதாக்குதல் என்பது தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வேறுபடுத்தப்பட்டு வழங்கப்படும் , ஏனென்றால் அவை வைரஸின் விளைவுகளிலிருந்து [பாதுகாக்க உதவும் .”
என்றும் கூறியுள்ளார்.

இதன் பொருள் என்னவென்றால், ஒரு உணவகத்தில் உணவருந்த விரும்புவோர் அல்லது உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்புவோருக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும். 100 க்கும் மேற்பட்ட மக்களுடன் ஒரு பெரிய நிகழ்வில் அல்லது மத சேவையில் கலந்து கொள்ள விரும்புவோருக்கும் இதுவே பொருந்தும் என்று திரு வோங் கூறினார்.

Related posts