TamilSaaga

சிங்கப்பூரில் 6 மணி நேரம் “onsite” வேலைக்கு பிறகு.. ஊழியர்களுக்கு “30 நிமிடம்” கட்டாய ஓய்வு – ஜனவரி.1 முதல் அமல்!

SINGAPORE: ஊழியர்களை லாரியில் அழைத்துச் செல்லும் ஓட்டுனர்களாக பணிபுரியும் பணியாளர்கள் தொடர்ச்சியாக 6 மணி நேரம் Onsite பணியில் ஈடுபட்டிருந்தால், நிறுவனங்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஓய்வு அளிக்க சிங்கை மனிதவளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுடமின்றி, ஊழியர்களை அழைத்துச் செல்லும் அனைத்து லாரிகளிலும் “vehicle buddy” என்று அழைக்கப்படும் மற்றொரு நபரை நியமிக்க நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த vehicle buddy என்ற நபர்களுக்கு அவர்களின் வேலை குறித்து விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை சோர்வின்றி இயக்க தகுதியுள்ளவரா என்பதையும் வாகனம் ஓட்டும்போது விழிப்புடன் அவர் இருப்பதையும் சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், கிளீனர் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புது உத்தரவுகள் அனைத்தும் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வருகின்றன. இவை தொழிலாளர் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதனை மனிதவள அமைச்சகம் (MOM), நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் போக்குவரத்து காவல்துறை (TP) ஆகியவை இணைந்து கூட்டாக இன்று (அக்டோபர் 19) அறிவித்துள்ளன.

இதுகுறித்து MOM மிக விரைவில் தொழிலாளர்களின் பாதுகாப்பான போக்குவரத்து குறித்த ஆலோசனைகளை வெளியிடும். அதில் முதலாளிகள், ஓட்டுநர்கள், வாகன நண்பர்கள் (Vehicle Buddy) மற்றும் லாரியில் பயணிக்கும் ஊழியர்களின் ஆகியோருக்கான பாதுகாப்பு பரிந்துரைகளையும் அறிவிக்கும்.

மேலும் படிக்க – “மூணு மாசமா சம்பளமே கொடுக்கல”… சிங்கப்பூரில் லாரியை நிறுத்தி “Entrance”-ஐ மறித்த 9 வெளிநாட்டு ஊழியர்கள்! சிங்கையில் இதுவரை எந்த ஊழியரும் செய்ய நினைத்துக் கூட பார்க்காத சம்பவம்!

அதுமட்டுமின்றி, தொழிலாளர் நலனை மேலும் மேம்படுத்த, அவர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் அனைத்து லாரிகளிலும் rain covers பொருத்தப்பட வேண்டும் என்று LTA தெரிவித்துள்ளது

ஜனவரி 1, 2023 முதல் புதிதாக பதிவு செய்யப்பட்ட லாரிகளில் இந்த rain covers பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜூலை 1, 2023 முதல் பயன்பாட்டில் உள்ள இலகுரக லாரிகளில் (அதிகபட்ச எடை 3,500 கிலோவுக்கு மிகாமல்) இந்த rain covers பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜன. 1, 2024 முதல் பயன்பாட்டில் உள்ள கனரக லாரிகளில் (அதிகபட்ச எடை 3,500 கிலோவுக்கு மேல்) இந்த rain covers பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3,500 கிலோ எடைக்கு மேல் (எம்எல்டபிள்யூ) ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

MLW 12,000kgக்கு மேல் உள்ள அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளன, மேலும் 3,500kgக்கு மிகாமல் MLW கொண்ட அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் வேக எச்சரிக்கை சாதனங்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts