TamilSaaga

“ஊருக்கு மாதம் 1 லட்சம் வரை அனுப்பலாம்” – இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாட்டு வாரியத்தின் “சூப்பர்” அறிவிப்பு

தெருவுக்கு தெரு ஒரு இன்ஜினியர் இருக்கான்” என்று இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக நாம் சொல்லக் கேட்டிருப்போம். இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று பொது புத்தி அதிகம் நிலவுகிறது.
ADVERTISEMENT

உண்மையில்.. இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காதா?

யதார்த்தமான உண்மை நிலையை சொல்ல வேண்டுமெனில், மக்களின் இந்த பொது புத்தி உண்மையில் மிக தவறானது. இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைப்பது கடினம் என்று சொல்வது மிக மிக தவறான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, திரைப்படங்களில் இன்ஜினியரிங் படித்தவர்களை கிண்டல் செய்வது, மீம்ஸ் போட்டு கலாய்ப்பது என்பது அதைவிட தவறான ஒரு விஷம பரப்புரையாகும்.

இங்கு சிக்கல் என்னெவெனில்,

இன்ஜினியரிங் நன்றாக படித்தவர்கள் vs நன்றாக படிக்காதவர்கள்

இன்ஜினியரிங் புரிந்து படித்தவர்கள் vs Basic கூட புரியாமல் இருப்பவர்கள்

இந்த Versus தான் இங்கு ரொம்ப ரொம்ப முக்கியம். லட்சக்கணக்கானோர் இன்ஜினியரிங் முடித்து வெளிவரும் நிலையில், தங்கள் Subject-ல் அதிக Knowledge இருப்பவர்களுக்கே வேலை கிடைக்கிறது. இதன் எண்ணிக்கை 95:5 எனலாம். அதவாது, 95 சதவிகித மாணவர்கள் தங்கள் இன்ஜினியரிங் படிப்பில் Stuff இல்லாமல் தான் வெளி வருகின்றனர்.

அதேசமயம், இன்ஜினியரிங் முடித்து வேலைக்கு சேருபவர்க்ளுக்கு பரோட்டா மாஸ்டர்களை விட குறைவான சம்பளம் தான் கிடைக்கும் என்று கூறுவது உண்மை தான். ஆனால், அந்த என்ஜினியர் அதே சம்பளத்தில் இருக்கப் போவதில்லை. அவருடைய சம்பளத்தைப் பொறுத்து, அடுத்த சில வருடங்களிலேயே லட்சங்களில் சம்பளம் வாங்க முடியும். ஆனால், எந்த பரோட்டா மாஸ்டராலும் லட்சத்தில் சம்பளம் வாங்க முடியுமா?

ஓரளவு சுமாரான காலேஜில் படித்தாலும், படிக்கும் போதே தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்ட மாணவர்கள் என்ஜினியரிங் துறையில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கிறார்கள். Arts படிப்பவர்களை விட அதிக சம்பளம் வாங்குவது என்ஜினியரிங் மாணவர்கள் தான். இன்னும் சொல்லப்போனால் மருத்துவத்துறையில் MBBS முடித்துவிட்டு, 5 வருடங்களாக 40 ஆயிரம், 50 ஆயிரம் சம்பளத்தை தாண்ட முடியாமல் இருக்கும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை விட 5 மடங்கு அதிகம் பொறியியல் மாணவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

சிங்கப்பூரில் பொறியியல் படித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி?

என்ன இப்படி கேட்டுட்டீங்க!!? இந்த 2022-ம் ஆண்டில் சிங்கப்பூரில் அதிகம் ஊதியம் பெறும் துறைகளின் பட்டியலை சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாதம் இரண்டரை லட்சம் வரை சம்பளம் பெறும் துறைகளில் பொறியியல் துறையின் IT இண்டஸ்ட்ரி இடம் பிடித்துள்ளது. நிதித்துறை, வணிகம், மருத்துவம் போன்ற இதர துறைகளை விட இதில் சற்று குறைவான சம்பளம் என்றாலும், ஊருக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சேமித்து அனுப்பக்கூடிய அளவுக்கான ஊதியம் இங்கு கிடைக்கிறது.

இதுகுறித்து MDIS வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் துறையானது, புதிய பட்டதாரிகளுக்கு அதிக ஊதியம் பெறும் துறைகளில் ஒன்றாகும். சிங்கப்பூரில் நீங்கள் அதிக ஊதியம் பெறும் வேலையைத் தேடத் துவக்கினால், இத்துறை சிறந்த தேர்வாக அமையும்.

பல நிறுவனங்கள் புதிய டிஜிட்டல் எதிர்காலத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இது சைபர் செக்யூரிட்டி, நெட்வொர்க்கிங் டெக்னாலஜி மற்றும் டேட்டாபேஸ் சிஸ்டம்ஸ் ஆகிய துறைகளில் தேவைக்கேற்ப திறன்களைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவையை உண்டாக்கியுள்ளது. Salary Explorer3 இன் படி, எத்திகல் ஹேக்கிங் திறன் கொண்ட ஒரு நிபுணர் பொதுவாக மாதத்திற்கு சுமார் $6,800 வருமானம் பெறுகிறார்.

சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய பொறியியல் பட்டதாரி, சராசரியாக மாதத்திற்கு $3,005 அல்லது ஆண்டுக்கு $39k சம்பளத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts