சிங்கப்பூர் Central business district-ல் உள்ள CapitaSpring கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
48 வயதான அந்த பெண் பொறியாளர் CapitaSpring கட்டிடத்தின் 16 வது மாடிக்கு மேலே பராமரிப்பு இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அப்போது, வேலை மும்முரத்தில் அவர் போலியான ceiling panel-ல் கால் வைத்துவிட்டார். இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள கேபிடாஸ்பிரிங் கட்டிடத்தில் ஏழு மாடிகள் விழுந்து 48 வயதான பொறியாளர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை இறந்தார்.
“48 வயதான உள்ளூர் பொறியாளர் ஒருவர் கட்டிடத்தின் 16 வது மாடிக்கு மேலே பராமரிப்பு மட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அவர் தவறான உச்சவரம்பு பேனலில் அடியெடுத்து வைத்தார்” என்று மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.
அவர் அந்த பேனல் மீது ஏறிய பிறகு அவரது எடையை தாங்க முடியாமல், அது உடைந்துவிட்டது. இதனால் அந்த பெண் என்ஜினியர் சுமார் 30 மீ உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.
அதாவது, ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்த அப்பெண் சம்பவ இடத்திலயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“ஒரு பொதுவான பாதுகாப்பு நடவடிக்கையாக, உயரத்தில் இருந்து விழும் அபாயத்தைப் பற்றி எச்சரிக்க, உடையக்கூடிய மேற்பரப்புகள் தெளிவாகவும் தெளிவாகவும் குறிக்கப்பட வேண்டும்.”
அந்த பெண், கேபிடாஸ்பிரிங் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான டிராகேஜஸ் சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்று அலுவலக கட்டிட நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“எங்கள் ஒப்பந்ததாரர் டிராகேஜஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கட்டிடத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. அவரது அன்புக்குரியவர்களுக்கு எங்களது அழுந்த அனுதாபங்கள். மேலும் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை வழங்குகிறோம்” என்று CapitaSpring நிறுவனம் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.