சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 14) பிற்பகல் பிளாக் 34 Whampoa Westல் உள்ள நடைபாதை கூரையின் மீது விழுந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி இறந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Lianhe Zaobao என்ற செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த பிளாக்கின் தரைத்தளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் 72 வயது பெண்மணி சம்பவத்தின்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், வெள்ளிக்கிழமை மாலை 5:10 மணியளவில் என்ன நடந்தது என்பதைச் சரிபார்க்க உடனடியாக இரண்டாவது மாடிக்குச் சென்றதாகவும் கூறினார்.
அவர் நடைபாதை கூரையில் ஒரு பெண் கிடப்பதை கண்டார், உடனடியாக உதவி பெற அவர் கீழே ஓடினார். இதனைத்தொடர்ந்து அந்த மூதாட்டியின் சக ஊழியர்(32) விரைவாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். கூரையில் விழுந்து கிடந்த அந்த பெண்ணின் கண்கள் மூடியிருந்தாலும் அந்த மூச்சு விடுவதை பார்க்கமுடிந்தது என்று அந்த நபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். சம்பவம் அறிந்து உடனடியாக வந்த போலீசார் அந்த பெண்ணுக்கு 33 வயது என்று உறுதி செய்தனர். Facebookல் அந்த வீடியோவில், பல துணை மருத்துவர்களும் SCDF அதிகாரிகளும் நடைபாதை கூரையின் மீது கிடந்த அந்தப் பெண்க்கு சிகிச்சை அளிப்பதை காணமுடிந்தது.
மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளித்த SCDF அதிகாரிகள், கடந்த ஜனவரி 14 அன்று மாலை 5:15 மணியளவில் பிளாக் 34 Whampoa Westல் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததாக கூறினார். உபகரணங்கள் இல்லாமல் அந்த பெண்ணை கூரையில் இருந்து மீட்டு அவரை Tan Tock Seng மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் கூறினார்கள். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது அந்த பெண் ஓரளவு சுயநினைவுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அனால் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது சிங்கப்பூர் போலீசார் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது கொலையாக இருக்க வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அந்த பெண் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகின்றது.