சிங்கப்பூரில் வேலைக்காக வொர்க் பெர்மிட்டில் செல்லும் சிலருக்கு S-Passல் மாற ஆசை இருக்கும். நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இதற்கு ஒரு சூப்பர் வழி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சிங்கப்பூரில் S-Passல் வேலை செய்ய குறைந்தது டிகிரி அல்லது டிப்ளமோ வைத்திருக்க வேண்டும். சிலர் குடும்ப சூழலால் பள்ளி படிப்புடன் வேலைக்கு வந்திருப்பார்கள். அவர்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்து கொண்டே படிக்கலாம். இதற்கு சொந்த நாடுகளில் செலவாவதை போல சிங்கப்பூரிலும் செலவாகும். ஆனால் அதன்பின் உங்கள் வாழ்க்கை பெரிய அளவில் மாற்றத்தினை சந்திக்கும்.
முதலில் பள்ளி படிப்பு இருந்தால் சிங்கப்பூரில் வேலை பார்த்து கொண்டே டிப்ளமோ படிக்க தயாராகுங்கள். படிப்பை தேர்வு செய்வதற்கு முன்னர் சிங்கப்பூரில் எந்த கல்லூரியில் படிக்கலாம் என்பதை தான் தேர்வு செய்ய வேண்டும். வேலைக்காக வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண்டிப்பாக முழுநேர கல்லூரிக்கு போக முடியாது. இதனால் பகுதி நேர படிப்பு வைத்திருக்கும் கல்லூரிகளின் பட்டியலை தேர்ந்தெடுங்கள். அப்போது தான் உங்களால் வேலை பார்த்து கொண்டு படிக்க ஏதுவாக இருக்கும்.
முக்கியமாக பகுதி நேர கல்லூரிகளில் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் தான் நடக்கும். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வகுப்பு எடுப்பார்கள். கல்லூரியை தேர்வு செய்யும் போது அரசு கல்லூரியை விட பிரைவேட் கல்லூரியை தேர்வு செய்யுங்கள். ஏனெனில், அரசு கல்லூரிகளில் இருக்கும் படிப்புகள் ஏறத்தாழ 2 முதல் 2.5 வருடம் எடுக்கும். இதனால் படிப்பு செலவு கூட $25000 சிங்கப்பூர் டாலர் வரை செல்லும். இது இந்திய மதிப்பில் 15 லட்ச ரூபாயாக கணக்கிடப்படுகிறது. இதில் படித்தால் மதிப்பு அதிகமாக இருக்கும் என்றாலும் வேலைக்கு வந்திருப்பவர்களுக்கு பெரிய சுமையாக தோணலாம். அதனால் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளையே அதிகம் பேர் தேர்வு செய்கிறார்கள்.
இங்கு படிப்பு ஒரு வருடத்திற்குள் தான் இருக்கும். படிப்பிற்கான செலவுக்கூட $6000 முதல் $8000 சிங்கப்பூர் டாலர் வரை தான் இருக்கும். 3 லட்சத்தில் இருந்து 5 லட்ச ரூபாயாக இந்திய மதிப்பில் கணக்கிடப்படுகிறது. உங்கள் பணியிடத்துக்கு அருகில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளை தேர்வு செய்து அதில் இருக்கும் படிப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் உங்கள் வேலைக்கு ஏதுவாக இருக்கும் ஒரு படிப்பினை தேர்வு செய்யலாம். Business Studies, Technology, Management, Engineering, Economic ஆகிய துறைகளில் எக்கசக்க டிப்ளோ கோர்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிப்பில் ஒன்றினை படித்து முடிக்கும் நிலையில், வொர்க் பெர்மிட்டில் இருந்து S-Passக்கு உங்களால் எளிதாக மாறமுடியும். அதிலும், இந்தியாவில் படித்துவிட்டு இங்கு வேலைக்கு வருபவர்களை விட இங்கையே படித்திருக்கும் உங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.
கவர்மெண்ட் யூனிவெர்சிட்டி:
National University of Singapore
Nanyang Technological University
தனியார் கல்லூரிகள்:
INSEAD – Singapore
PSB Academy
Nanyang Institute of Management
இந்த கல்லூரிகள் சிங்கப்பூரின் ரேங்கிங் பட்டியலில் முதல் சில இடங்களை பிடித்திருக்கிறது. பிரபலமான கல்லூரிகளில் என்பதால் படிப்பு செலவு கூட அதிகம் ஆகலாம். அதனால் நீங்கள் இருக்கும் ஏரியாக்களில் கூட கல்லூரிகள் குறித்தும் செலவுகள் குறித்தும் விசாரித்து பார்ப்பதும் சிறந்த வழி தான்.