சிங்கப்பூர் R1 தொழிலாளர்கள்
சிங்கப்பூரின் கட்டுமானத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இரண்டு வகைகளாக அழைக்கப்படுகிறார்கள். ஒன்று `High Skilled’ R1 தொழிலாளர்கள் எனப்படும் பயிற்சி பெற்ற திறன்மிக்க தொழிலாளர்கள். மற்றொன்று R2 எனப்படும் பயிற்சியை முடிக்காத அடிப்படைத் தொழிலாளர்கள்.
இதையும் படிங்க: லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு…
சிங்கப்பூர் அரசு R1 தொழிலாளர்களுக்கென சில விதிமுறைகளையும் தகுதிபெறுவதற்கான வரைமுறைகள் சிலவற்றையும் வகுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும், தங்களது மொத்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 10% R1 தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும் என்பது விதி.
R1 தொழிலாளர்கள் என்றால் என்ன?
கட்டுமானத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் Continuing Education and Training (CET) மற்றும் பணி தொடர்பான SEC(K) பயிற்சியையும் முடித்து R1 தொழிலாளர்களாகத் தங்களை மெருகேற்றிக் கொள்ள முடியும். CET என்பது பணி பாதுகாப்பு, துறையின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல வசதி வாய்ப்புகள் பற்றி அரைநாள் பயிற்சி வகுப்பாகும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு…
இந்த பயிற்சிகளை முடிக்கும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக $1,600 நிர்ணயிக்கப்படும். உள்ளூர் கட்டுமானத் துறையில் குறிப்பிட்ட ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களும் மேற்குறிப்பிட்ட பயிற்சியை முடித்து தங்களை R1 தொழிலாளர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.
அதேபோல், சிங்கப்பூரில் ஏற்கனவே பணியாற்றும் தொழிலாளார்களைப் பொறுத்தவரை, Core Trade/ Multi Skilling பயிற்சி முடித்து குறைந்தபட்சமாக 4 ஆண்டுகளும் MBF பயிற்சி முடித்து 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட தொழிலாளர்கள், தங்களின் SEC(K) டெஸ்டில் CET பயிற்சியை முடித்து R1 தொழிலாளர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.
நேரடி R1 தொழிலாளர் முறை
சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டுத் துறை (MoM) வகுத்திருக்கும் விதிகளின்படி வெளிநாட்டுத் தொழிலாளர்கள், நேரடியாக R1 தொழிலாளர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.
சரி யாரெல்லாம் நேரடியாக R1 தொழிலாளர் பதிவுக்கு விண்ணப்பிக்க முடியும்?
- SEC(K) பயிற்சியை அதிக திறனுடன் முடித்திருக்க வேண்டும்.
- CET பயிற்சி அவசியம்.
- மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் $1,600 நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்கள்.
- நேரடி R1 தொழிலாளர் பதிவு இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். உங்கள் பதிவு காலாவதியாகும் 3 மாதங்களுக்கு முன்பு புதுப்பித்தலுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
R1 தொழிலாளர் பதிவு முறையின் பயன்கள்
- பணி பாதுகாப்பு.
- குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
- மனிதவள மேம்பாட்டுத்துறை அளிக்கும் பல்வேறு பலன்களைப் பெற முடியும்.