TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கும் ஊழியர்களே… உங்கள் விசாவில் இந்த சிக்கல் இருக்கா? இதற்கு தான் இருக்கு myMOM.. என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?

ஊழியர்கள் சிலர் S-Pass, E-Pass மற்றும் Dependent visa அப்ளே செய்திருப்பார்கள். ஆனால் அதனை திடீரென கேன்சல் செய்ய வேண்டியது வரும். அப்போதைய சூழலில் இந்த ஒரு வெப்சைட்டில் இந்த பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம். இருந்தும் இதற்கு சில கட்டுபாடுகள் இருக்கிறது. அதுகுறித்து தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படிங்க.

EP, S pass, dependent visa அல்லது long term pass விண்ணப்பிக்க முதலாளிகள் அல்லது Employment Agency மட்டுமே myMOM போர்ட்டலைப் பயன்படுத்தலாம். பாஸை வழங்கவும் அல்லது ரத்து செய்யவும் ( Work Permit அனுமதி தவிர அனைத்து பாஸ் வகைகளும்) அல்லது EP அல்லது S passப் புதுப்பிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இவை தற்போது EP Onlineல் இருந்து myMOM போர்ட்டலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

பாஸ் தொடர்பான பிற பரிவர்த்தனைகள் (எ.கா. TEP, Dependent visa அல்லது Long term visa புதுப்பித்தல்) ஆகியவற்றுக்கு தொடர்ந்து EP Onlineஐ தொடர்பு கொள்ளுங்கள். myMOM போர்ட்டல் நிறுவன முதலாளிகள் அல்லது Employment Agency, MOM eServicesஐ ஒரே லாகினில் பார்க்கவும் அனுமதிக்கிறது.

ஊழியர்களின் விண்ணப்பச் செயல்பாட்டில் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் பாஸ் நிலை மற்றும் தொடர்புடைய அடுத்த கட்டத்தினை குறித்தும் பார்க்கலாம். myMOM போர்ட்டலைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குப் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நீங்கள் பணம் செலுத்தலாம். GIRO (உங்களிடம் ஏற்கனவே EP ஆன்லைனுக்கான GIRO ஏற்பாடு இருந்தால் மட்டுமே) மாஸ்டர்கார்டு அல்லது விசா கார்டின் மூலமும் அனுப்பலாம்.

myMOM portalல் EP அல்லது SP விண்ணப்பிக்க தேவையான விவரங்களுக்கு candidate’s formஐ பார்க்கவும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தேவையான தகவல்களை சேகரிக்க விண்ணப்பதாரருக்கு நீங்கள் படிவத்தை மின்னஞ்சல் செய்யலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts