SINGAPORE: சிங்கையில் ‘Painting Inspector’-ஆக பணி புரிந்து வந்தவர் தூண்டி வீரையன், கடந்த ஜூன் 23ம் தேதி தனது அறையில் இறந்து கிடந்த நிலையில், அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் தமிழ் சாகாவுக்கு கிடைத்துள்ளது.
இன்றைய சூழலில், சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலைக்கு செல்வது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. வேலை கிடைப்பது பெரிய விஷயமல்ல. சிங்கப்பூரில் ஒரு நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் நல்ல முதலாளியிடம் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயம்.
அப்படி 30 வருடத்திற்கு முன்பாகவே, வெறும் 1ம் வகுப்பு மட்டும் படித்திருந்த தூண்டி வீரையன், தன் உழைப்பை நம்பி சிங்கப்பூர் போனார். படிப்படியாக தொழிலில் தனது திறமையை வெளிப்படுத்தி, ஒரு கப்பம் கட்டுமான நிறுவனத்தில் ‘Painting Inspector’-ஆக பணிபுரியும் அளவுக்கு முன்னேறினார்.
சிங்கப்பூரிலயே ‘Painting Inspector’ வேலையை 1ம் வகுப்பு மட்டும் மட்டும் படித்துவிட்டு பார்த்த ஒரே ஆள் வீரையா தான் என்றால் அது மிகையாகாது. மிக முக்கியமான உயர்ந்த அந்தஸ்து கொண்ட இந்த வேலைக்கு நன்கு படித்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், அடித்திருக்கும் பெயிண்ட் சரியில்லை என்று இவர் சொன்னால்… மறுபடியும் முதலில் இருந்து ஊழியர்கள் பெயிண்ட் அடித்தாக வேண்டும். இவர் ஓகே சொன்னால் தான் Output இறுதி செய்யயப்படும்.
காலையில் வேலைக்கு சென்றால், மதியமே பணி முடிவடைந்துவிடும். அன்றைய தினம்… அதாவது ஜூன் 23ம் தேதி, வேலையை முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் தனது அறைக்கு வீரையா திரும்பிவிட்டார். பிறகு சாப்பிட்டு அறையிலேயே படுத்துவிட்டார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அசைவில்லாமல் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட மாலை 5 மணி அளவில், வீரையா உடலில் இருந்து எந்த அசைவும் இல்லாததை அறிந்த சக ஊழியர்கள் பதட்டமடைந்துள்ளனர்.
உடனே ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு, வீரையாவின் மகளுக்கு Video Call செய்துள்ளனர். வீரையாவுக்கு இரண்டு மகள், ஒரு மகன் என்று மொத்தம் 3 பிள்ளைகள். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது பெண் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அறையில் இருந்து சக ஊழியர்கள் வீரையாவின் மகளுக்கு Video Call செய்துள்ளனர். அவரும் Line-ல் வந்து அசைவற்று இருந்த தந்தையை பார்த்து அழுதிருக்கிறார். ‘அப்பா… என்னை பாருங்க’ என பலமுறை அவர் அழைத்தும் வீரையா உடலில் எந்த மாற்றமும் இல்லை.
பிறகு மருத்துவர்கள் வந்து சோதித்த போதுதான், அவர் இறந்தே மூன்று மணி நேரம் ஆகியிருந்தது தெரிய வந்தது. படுத்த சில நிமிடங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் இறந்திருக்கிறார். அவர் தூங்குகிறார் என்றே மற்றவர்கள் இருந்துள்ளனர். இறந்துவிட்டார் என்று யாருமே நினைக்கவில்லை.
இந்த சூழலில், இன்று (ஜூன்.26) காலை திருச்சி விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினம் கிராமத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.