சிங்கப்பூரில் S பாஸ் மற்றும் பணி அனுமதி பெற்றவர்கள் தங்குவதற்கான அறிவிப்பு (தனிமைப்படுத்துதல்)(SHN) காலத்திற்கு, வெளிநாட்டு தொழிலாளர்களின் வரி விலக்கு இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் திங்கள்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்துள்ளார். இது முதலாளிகளுக்கு, அவர்களது தொழிலாளர்களை பாதுகாப்பாக கொண்டு வர உதவுவதோடு SHN தேவைகளின் செலவுகளை சரிசெய்து நிர்வகிக்க அவர்களுக்கு அதிக நேரத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சராக இருக்கும் டாக்டர் டான், பெருந்தொற்று நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் துறைக்கு இந்த விஷயம் ஆதரவளிப்பதாகவும் கூறினார். இந்த தள்ளுபடி புலம்பெயர்ந்த வீட்டு வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும். மேலும் இந்த தள்ளுபடி காலம் இந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது நினைவுகூரத்தக்கது.
சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் (REDAS) நிகழ்வில் பேசிய டாக்டர் டான், கட்டுமானம் மற்றும் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் துறை தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். “இந்தக் காலப்பகுதி முழுவதும், கோவிட் -19ன் தாக்கத்தை நிர்வகிக்க இந்தத் துறை வலுவாக செயல்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் கூறினார். இந்த துறையையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒப்பந்தக்காரர்கள் தங்கள் வலுவான ஆதரவை அளித்ததற்காக அவர் நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 1.36 பில்லியன் கட்டுமான ஆதரவு தொகுப்பு மற்றும் மனிதவள பற்றாக்குறையைப் போக்க “விதிவிலக்கான நெகிழ்வுத்தன்மை” உட்பட, இந்தத் துறைக்கு உதவ ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகளை இந்த உரையில் அவர் முன்னிலைப்படுத்தினார். “எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்வதற்கு ஒரு முழு சமூக முயற்சியை நாம் முன்னெடுப்போம் என்று டாக்டர் டான் கூறினார்.