சிங்கப்பூரில் வேலை செய்து வந்த ஊழியரின் திருமணத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளி கலந்து கொண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதை பார்த்த அனைவருக்குமே அந்த முதலாளியை பாராட்டி தள்ளினர். ஆனால் அந்த முதலாளி இத்தனை ஸ்பெஷலாக கிளம்பி வந்ததன் உண்மை காரணம் தான் பலரையுமே கலங்க வைத்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மாரிமுத்து. இவரின் திருமணம் தான் கடந்த மாதம் சிங்கை வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மாரிமுத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கடந்த 17 வருடமாக வேலை செய்து வருகிறார். இவருக்கு பெற்றோர் பார்த்த நித்யாவுக்கும் பிப்.23ந் தேதி திருமணம் செய்து வைத்தனர். கோலாகமாக நடந்த திருமண விழாவில் சிங்கை லக்கி ஜாயின்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கெல்வின் இயோ கலந்து கொண்டார்.
புதுமாப்பிள்ளை தோரணையில் பட்டு வேஷ்டி சட்டையில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்த மக்கள் மேளதாளத்துடன் மண்டபத்திற்கு வரவேற்றனர். கெல்வின் அங்கிருக்கும் லக்கி ஜாயின்ட் ஊழியர்களையும் பார்த்ததாக கூறப்பட்டது. மேலும் அங்கிருக்கும் ஊராட்சி மன்ற பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உதவி தொகை வழங்கினார். சிங்கையில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஊழியர்களின் வாழ்க்கையை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் மாரிமுத்துவின் திருமணத்துக்கு அவ்வளவு மதிப்பு கொடுத்து அவர் கிளம்பி வர என்ன காரணம் என விசாரிக்கையில் ஆச்சரியப்படும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாரிமுத்து தன்னுடைய 20 வயதில் சிங்கைக்கு வந்திருக்கிறார். இரண்டு அக்காவினை திருமணம் செய்து கொடுக்க போராட்டமாக லீவ் எடுக்காமல் உழைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: வற்றாத நதியே காஞ்சி போய்ட்டா? சிங்கப்பூரின் MOM வெப்சைட் மீதே கை வைத்த தில்லாலங்கடி கும்பல்… விசா செக் செய்ய போற முன்னாடி இத செக் பண்ணிக்கோங்கோ!
அதுமட்டுமல்லாமல் 17 வருடமாக சிங்கப்பூரில் இருக்கும் மாரிமுத்து ஒரு வருடம் கூட வருடாந்திர விடுப்பு எடுத்ததே இல்லையாம். இதனால் அவரின் உழைப்புக்கு நிறுவனம் மதிப்பு கொடுத்து நல்ல ப்ரோமோஷனில் தற்போது பணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இத்தனை தூரம் உழைத்த மாரிமுத்து திருமணம் என்பதாலே ஸ்பெஷலாக கெல்வினே திருமணத்தில் கலந்து கொண்டு ஆர்வமாக கிளம்பி சென்று இருக்கிறார். இதில் யாரை பாராட்ட என்பதற்கு தான் வார்த்தை கிடைக்கவில்லை.