இந்தியாவின் பல பகுதிகளுக்கு தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அனுதினம் இயக்கப்படுகிறது. மக்களும் இந்த சேவைகளை பயன்படுத்தி சிங்கப்பூர் உள்பட பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு செல்கின்றனர். மேலும் இந்தியா தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாரிக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் திருச்சிக்கு மற்றும் தலைநகர் சென்னைக்கு செல்ல விமானங்கள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் தவித்து வந்தனர். திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட பல இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் குறித்த நேரத்தில் தங்களுடைய அவசர தேவைக்காக சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
பின்னர் அதனை அறிந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மேலும் சில சிறப்பு விமானங்களை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் சென்னைக்கு இயக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து வருகின்ற நவம்பர் மாதம் 12 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனத்திற்கு தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் அளித்த தகவலின்படி சிங்கப்பூர் முதல் திருச்சிக்கு நவம்பர் 2,3,5,9,10,12,16,17,19,23,24 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் நவம்பர் 2ம் தேதிக்கான டிக்கெட் ஏற்கனவே விற்றுத்தீர்ந்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Source : நந்தனா ஏர் ட்ராவல்ஸ் திருச்சி – 9600223091