சிங்கப்பூரில் பணி புரியும் லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கென்று பிரத்தியேகமாக சேவை ஆற்றுகின்ற 13 மருத்துவ மையங்கள் தற்பொழுது சிங்கப்பூரில் உள்ளது. பொது மருத்துவர்கள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதைப் போல இருந்த மருத்துவ மையங்களிலும் தீவிர மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு எளிய பராமரிப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் இடங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு இந்த மருத்துவ மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
தொழிலாளர்கள் உடனடியாக vaccine.gov.sg என்ற இணையதளம் மூலம் கொரோனா தடுப்பூசியை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போட வரும் காற்றோட்டமான ஆடைகளை அணிவதோடு தங்கள் ஒர்க் பெர்மிட் கார்டை கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.