தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமை உத்தரவு இல்லாமல் சிங்கப்பூருக்கு அனுமதிக்கும் முன்னோடி திட்டத்தின் படி நாளை ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்துக்கு விமானம் மூலம் பயணிகள் வருகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் தனிமை உத்தரவு இல்லாமல் வர முடியும். அதே சமயம் நான்கு PCR சோதனை மற்றும் மேலும் சில நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
உள்ளூர் நேரத்தின் அடிப்படையில் ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நகரத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட்ட விமானம் SQ325 விமானம் இன்று காலை 4.25 மணியளவில் சிங்கப்பூரை அடையும் என்பது அட்டவணை விவரமாகும்.
புரூனே மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு வழித்தடத்தை சிங்கப்பூர் திறப்பதற்கு இது ஓர் துவக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சிங்கப்பூரில் இருந்து ஜெர்மனி செல்ல நினைப்பவர்களுக்கான பயணப் பாதையை ஜெர்மனி அக்டோபர் மாதம் திறந்தது.