அமெரிக்க துணைத் அதிபர் கமலா ஹாரிஸ் அடுத்த மாதம் சிங்கப்பூர் மற்றும் வியட்நாமுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை நேற்று (ஜூலை.30) அறிவித்ததுள்ளது. இந்த பயணம் இரண்டு முக்கியமான இந்தோ-பசிபிக் நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் கூறியுள்ளனர்.
பிரதமர் லீ அவர்களின் அழைப்பின் பேரில் அவரது சிங்கப்பூர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிகிறது.
“அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வருகை எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வலிமையை உறுதிப்படுத்துகிறது” என்று பிரதமர் திரு லீயின் செய்திச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருமதி ஹாரிஸ் சிங்கப்பூர் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் வர்த்தகம், காலநிலை மாற்றம் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு உலகளாவிய பதில் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார் என்றும் அவர் கூறினயுள்ளார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூருக்கு தனது முதல் அரசு ரீதியிலான பயண வருகையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் திரு லீ கூறியுள்ளார்.
“இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களில் ஒன்றாக பணி செய்வதற்கான எங்கள் கருத்துக்களை நான் எதிர்பார்க்கிறேன்,” என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.