TamilSaaga

சிங்கப்பூரில் வேலை செட் ஆகுமா என்ற டவுட் இருக்கா? அப்படி என்றால் TWP பாஸ் உங்களுக்கான சரியான சாய்ஸ்.. பிடிச்சா டெஸ்ட் அடிக்கலாம் இல்லையா ஊருக்கு போகலாம்..

சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நாம் படித்திருக்க வேண்டுமே? ஆனால் நாம் படிக்கவில்லையே என்று நினைப்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்களுக்காக காத்திருக்கும் பாஸ்தான் TWP. Training Work Permit என்று அழைக்கப்படும் இந்த பாசின் மூலம் நீங்கள் சிங்கப்பூருக்கு ஏஜென்ட் மூலம் வந்து ஆறு மாத காலம் தங்கி வேலை பார்க்கலாம்.

இதற்கு நீங்கள் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாவது மட்டும் படித்திருந்தால் போதுமானது. சில கம்பெனிகளில் அதுவும் கேட்கப்படாது. ஆறு மாத காலம் முடிந்தவுடன் நீங்கள் சிங்கப்பூரில் வேலை தொடரலாமா? இல்லையா? என்ற முடிவினை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். அப்படி நீங்கள் சிங்கப்பூரில் தங்கி வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் கம்பெனியின் உதவியுடன் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு உங்களது கம்பெனியின் வேகன்ஸி இருந்தால் அப்படியே ஒர்க் பெர்மீட்டிற்கு மாறிக் கொள்ளலாம். இல்லையென்றால் திரும்பவும் இந்தியாவிற்கு வந்துவிடலாம். சில ஏஜென்ட்கள் இந்த பாஸ்க்கு பீஸ் ஆக மூன்று லட்சம் வரை கேட்பார்கள். ஒரு நாளைக்கு 20 முதல் 22 சிங்கப்பூர் டாலர்கள் ஒருநாள் சம்பளமாக கிடைக்கும்.

தங்கியிருக்கும் இடத்தை அவர்களே கொடுத்து அதற்கான பணத்தை மட்டும் பிடித்தம் செய்து கொள்வார்கள். சிலருக்கு ஓவர் டைம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த சம்பளம் போதும் சிங்கப்பூரிலே வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தால் ஆறு மாதத்திற்குள் வேலை செய்து கொண்டே சிங்கப்பூரில் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம். சில கம்பெனிகள் அவர்களாகவே டெஸ்ட் அடிக்க அனுமதிக்கின்றார்கள். அப்படி கம்பெனி அனுமதிக்கவில்லை என்றால் வெளியில் அப்ளை செய்து நாமாகவே டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதை விட சிங்கப்பூரில் டெஸ்ட் எடுப்பது எளிது. எனவே இந்த பாசினை நீங்கள் டெஸ்ட் அடிக்க பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் ஒரு நல்ல வேலையினை இங்கு தேடிக் கொள்ளலாம்.

Related posts