TamilSaaga

அந்தரத்தில் பாதுகாப்பே இல்லாமல் பணியாற்றிய ஊழியர்கள்.. இரண்டு சிங்கை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவு – தொழிலாளர்கள் விஷயத்தில் முதன் முதலாக தனது சிங்க முகத்தை காட்டிய சிங்கப்பூர் அரசு!

எத்தனையோ முறை எச்சரிக்கை கொடுத்து கொடுத்து ஓய்ந்து போன சிங்கை அரசு, முதன் முதலாக இரு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆம்! சிங்கப்பூரில் பணியிட விபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் இறப்பதும், படுகாயமடைவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் கூட, அதாவது ஜூலை 30ம் தேதி, Towner சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியத் திட்ட தளத்தில் மண் கலவை இயந்திரம் ஒன்று அதன் Mast சேதமடைந்த நிலையில், முறிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 31 வெளிநாட்டு ஊழியர்கள் பணியிடத்தில் இறந்துள்ளனர். குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், இரண்டு தமிழக ஊழியர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அதில், ராஜேந்திரன் எனும் ஊழியரும் அடக்கம். மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையான ராஜேந்திரனின் (வயது 32) மரணம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் உலுக்கிவிட்டது.

இதையடுத்து, நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்தின் முன்னெடுப்பு காரணமாக, அவரது குடும்பத்துக்கு சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் ரூ.18,000 வரை நிதியுதவி கிடைத்தது.

இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சிங்கை நாடாளுமன்றத்தில் பேசிய மனிதவளத்துறையின் மூத்த அமைச்சர் Zaqy Mohamad, “பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பின்றி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர்கள் மீது வழக்கு தொடர முடியும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் திக்குத் தெரியாமல் தவித்த நாட்கள்.. “அள்ளிக் கொடுத்து” காப்பாற்றிய பெண் – 11 வருடங்கள் கழித்து தேடும் வெளிநாட்டு ஊழியர்

இந்நிலையில், நேற்று (ஆக.4) இரண்டு நிறுவங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அதன் கட்டுமான பணிகளை அரசு நிறுத்தியுள்ளது.

சமீபத்திய அவ்விரு நிறுவனங்களிலும் மனிதவளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அங்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து MOM நேற்று (ஆக்க.4) தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காக CAD Associates நிறுவனத்திற்கு $21,000 மற்றும் KHC டெவலப்மென்ட் எனும் நிறுவனத்திற்கு $20,000 அபராதம் விதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த இரு நிறுவனங்களிலும் நடைபெற்று வந்த கட்டுமானப்பணிகளை நிறுத்தியுள்ளதாகவும் MOM கூறியுள்ளது.

இதுகுறித்து MOM இன் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு இயக்குனர் செபாஸ்டியன் டான் கூறுகையில், “இந்த இரண்டு பணியிடங்களிலும் உள்ள worksites-கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளன. நமது தொழிலாளர்கள் மேலே இருந்து கீழே தவறி விழுவது போன்றும், பொருட்கள் சரிந்து அவர்கள் மீது விழுவது போன்றும் உள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றார்.

இந்த ஆய்வின் போது, ஒரு நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் எந்த ஒரு பாதுகாப்பு நிலையும் இல்லாமல், மேலே நின்று கொண்டு கட்டிடப் பணிகளில் ஈடுபடும் புகைப்படத்தையும் MOM எடுத்து வெளியிட்டுள்ளது.

மற்றொரு புகைப்படத்தில் கட்டிடத்தின் மேலே எந்தவிதம் ஒழுங்கும் இன்றி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை கீழே தொழிலாளர்கள் மீது விழுந்தால், நிச்சயம் உயிர்சேதம் உறுதி.

இப்படி எந்தவித முறையான பாதுகாப்பும் இன்றி இவ்விரு நிறுவனங்களும் செயல்பட்டதால், அபராதம் மட்டுமின்றி, கட்டுமான பணிகளையும் சிங்கை அரசு நிறுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts