TamilSaaga

சிங்கப்பூரில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் பொழுது ஏற்பட்ட சிக்கல்… இறந்தவர்களின் அஸ்தியை மாற்றி கொடுத்து மாட்டிக் கொண்ட ஊழியர்கள்!

சிங்கப்பூரில் இறந்த இரு உடல்களை ஒரே நேரத்தில் எரித்த பொழுது இறந்தவர்களின் சாம்பல் இரு குடும்பத்திற்கும் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெவ்வேறு நாட்களில் இறந்த இருவரின் உடல்கள் ஆகஸ்ட் எட்டாம் தேதி மண்டாயில் உள்ள தகன சாலையில் எரியூட்டும் பொழுது சாம்பல் மாற்றி கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இறந்த இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. இறந்தவர்களில் 69 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் மற்றும் 82 வயது நிரம்பிய முதியவர் மற்றொருவர் ஆவார். 82 வயது முதியவர் தாவோ மதத்தைச் சேர்ந்தவர் ஆவார் மற்றும் 69 வயது முதியவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். எனவே கிறிஸ்தவ மதத்திற்கு பின்பற்ற வேண்டிய சடங்குகளை மாற்றி மற்றொருவருக்கும், அவருக்கு பின்பற்ற வேண்டிய சடங்குகளை மாற்றி கிறிஸ்தவ முதியவருக்கும் செய்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மின்சார சுடுகாடானது அரசிற்கு சொந்தமானது என்பதால், அரசே மெத்தனப்போக்குடன் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வழக்கு தொடுத்து உரிய இழப்பீடை பெறும் நோக்கத்தில் வழக்கறிஞரை நாடியுள்ளனர். இதற்கிடையில், தேசிய சுற்றுப்புற வாரியம் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரி உள்ளது. எனவே அவர்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான மன்னிப்பை ஏற்றுள்ளனர்.

சிங்கப்பூரில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத நிலையில், அரசாங்கம் வருத்தம் தெரிவித்து ஊழியர்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts