கொரோனா நோய் தொற்றால் இதுவரை சிங்கப்பூரில் 62,339 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 20 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது முழுமையாக தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61,931 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் 146 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அதில் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சிங்கப்பூரில் 34 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.