TamilSaaga

Bukit Panjang பாதையில் 3 மணி நேரம் ஸ்தம்பித்து நின்ற ரயில்.. ‘கும்கி’ யானை போல… வேறொரு ரயிலை வைத்து தள்ளிய அதிகாரிகள் – சிங்கையில் இதெல்லாம் ரொம்ப புதுசு!

சிங்கப்பூர் – Keat Hong ரயில் நிலையத்திற்கு அருகே இன்று (மே 24) நிறுத்தப்பட்ட ரயில், கோளாறு காரணமாக புக்கிட் பஞ்சாங் எல்ஆர்டி பாதையில் மூன்று மணிநேரம் நின்றது.

அதுகுறித்து SMRT ரயில் ஆபரேட்டர் பதிவிட்ட டீவீட்டில், “இன்று காலை 9.21 மணிக்கு ரயிலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் புக்கிட் பாஞ்சாங் மற்றும் சோவா சூ காங் நிலையங்களுக்கு இடையே அந்த ரயில் அப்படியே நின்று போனது. எனவே, பயணிகள் இலவச பேருந்து சேவைகளைப் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் இன்று காலை 10.15 மணிக்கு புக்கிட் பஞ்சாங் எல்ஆர்டி நிலையத்திற்கு வந்தடைந்தபோது, இரண்டு SMRT ஊழியர்கள் ரயில் பயணிகளை புக்கிட் பஞ்சாங் பேருந்து நிலையம் செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரை பார்த்து சிங்கப்பூரே பொறாமைப்படும் ‘7 சட்டங்கள்’ – கொஞ்சம் அசந்தாலும் சவுக்கடி, அபராதம் கன்ஃபார்ம்!

கீட் ஹாங் மற்றும் சவுத் வியூ நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நின்ற ரயிலை வெளியே தள்ள SMRT மற்றொரு ரயிலை அனுப்ப வேண்டியிருந்தது.

இதையடுத்து பகல் 12.05 மணிக்கு வழக்கமான ரயில் சேவை தொடர்ந்து. இலவச பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன என்று SMRT ரயில் ஆபரேட்டர் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts