TamilSaaga

“சிங்கப்பூரில் 367 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு” : யாருக்கும் தீவிர நோய் பிரச்சனை இல்லை – MOH

சிங்கப்பூரில் இன்றுவரை 367 குழந்தைகள் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதில் 172 குழந்தைகளுக்கு டெல்டா வகை வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மூத்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து உள்ளூர் தொற்று நோய்களிலும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 0.6 சதவிகிதம் உள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் டான் வு மெங் (PAP-ஜுராங்) மற்றும் திரு யிப் ஹான் வெங் (PAP-யியோ சூ காங்) ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதும் டாக்டர் புதுச்சேரி அவர்கள் கூறினார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில், 50 வழக்குகள் பூஜ்ஜியத்திலிருந்து ஒரு வயது வரை, 83 வழக்குகள் இரண்டு முதல் நான்கு வயதுக்குட்பட்டவை, 76 வழக்குகள் ஐந்து முதல் ஆறு வயது வரை, மற்றும் 158 வழக்குகள் ஏழு முதல் 12 வயதுக்குட்பட்டவை என்றார் அமைச்சர். மேலும் பாதிக்காட்டுள்ள குழந்தைகள் யாரும் செயற்கை சுவாசம் தேவைப்படும் அல்லது ICU பராமரிப்பில் இல்லை என்றும் அவர் கூறினார். சிங்கப்பூரை பொறுத்தவரை 12 வயதிற்கு உட்பட்ட குழைந்தைகள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனைகள் முடிந்து ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் தொடங்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடந்த பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

Related posts