SINGAPORE: 2022ல் சிங்கப்பூரில் நடந்த பணியிட மரணங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இது 2020ல் ஏற்பட்ட மொத்த தொழிலாளர் இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இதுவரை மொத்தம் 32 ஊழியர்கள் பணியிடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுபோன்று நடைபெற்ற பணியிட விபத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு இது.
பிப்ரவரி 6: கெப்பல் டெர்மினலில் (Keppel Terminal) தனது வாகனத்தில் இருந்து இறங்கும் போது 59 வயதான பிரைம் மூவர் டிரைவர் கீழே விழுந்த போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இறுதியில், பிப்ரவரி 8 அன்று உயிரிழந்தார்.
பிப்ரவரி 11: தானியங்கி இயந்திரத்தின் பாகங்கள், ஊழியர் ஒருவர் தலையில் வேகமாக மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிப்ரவரி 11: அதே நாள், உட்லண்ட்ஸ் செக்டார் 2 இல் உள்ள ஒரு தொழிற்துறை கட்டிடத்தில் திறந்த கார்பார்க்கில் பணிபுரியும் போது 52 வயதான உள்ளூர் துப்புரவு பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
பிப்ரவரி 23: சீனாவைச் சேர்ந்த 49 வயதான ஊழியர் ஒருவர், டேம்பைன்ஸ் ஸ்ட்ரீட் 64 இல் உள்ள பில்ட்-டு-ஆர்டர் (பி.டி.ஓ) தளத்தில் அவர் இயக்கிய forklift பக்கவாட்டில் கவிழ்ந்ததில் பலியானார்.

மார்ச் 2: புதிதாகக் கட்டப்பட்ட மூன்று மாடி வீட்டை ஆய்வு செய்யச் சென்ற தொழிலாளி ஒருவர் மேலே இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

மார்ச் 12: ஹூகாங் அவென்யூ 3 இல் உள்ள BTO தளத்தில் விழுந்த இரும்புத் தகடு தாக்கியதில் 43 வயதான சீன நாட்டவர் உயிரிழந்தார்.
மார்ச் 21: கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனமான லிடா ஓசியன் வளாகத்தில், ஒரு சரிவான பகுதியில் வாகனத்தைச் ஓட்டிச் சென்றபோது forklift கவிழ்ந்ததில் அதன் டிரைவர் பலியானார்.

மார்ச் 28: 30 மற்றும் 42 வயதுடைய இரண்டு பங்களாதேஷ் தொழிலாளர்கள், துவாஸில் உள்ள கெப்பல் ஷிப்யார்டில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் மேல் ஒரு அமைப்பு இடிந்து விழுந்ததில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

ஏப்ரல் 1: ஜூரோங் வெஸ்டில் உள்ள லோக் யாங் வே மற்றும் முதல் லோக் யாங் சாலை சந்திப்பில் 72 வயதான சிங்கப்பூர் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றொரு தனியார் பேருந்து விபத்தில் இறந்தார்.
ஏப்ரல் 4: 36 வயதான இந்தோனேசியத் தொழிலாளி ஒருவர், ஒரு படகில் மற்றொன்றை இணைக்கும் கயிறுகளைப் பாதுகாக்கும் போது கடலில் தவறி விழுந்து இறந்தார்.
ஏப்ரல் 8: மார்க்கெட் தெருவில் உள்ள CapitaSpring கட்டிடத்தின் 16 வது மாடிக்கு மேலே உள்ள கூரையில் இருந்து விழுந்த 48 வயதான சிங்கப்பூர் பொறியாளர் பலியானார்.
ஏப்ரல் 10: சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயதான உணவு விநியோகிக்கும் ஊழியர் ஒருவர், ஆர்டரை எடுக்கச் சென்றபோது காம்பாஸ் அவென்யூவில் வேன் மோதி இறந்தார்.

ஏப்ரல் 18: தோவா பயோவில் உள்ள ஒரு உணவகத்தில் க்ளோஸ்-சர்க்யூட் கேமரா கேபிள்களை நிறுவும் போது 65 வயதான உள்ளூர் மின் ஊழியர் ஒருவர் ஏணியில் ஏறிய போது 1.5 மீ உயரத்தில் இருந்து விழுந்தார். அவர் ஏப்ரல் 27 அன்று தன் உயிரை பறிகொடுத்தார்.
ஏப்ரல் 21: செம்பவாங் தியான் ஹோ கெங் கோவிலில் உள்ள கூடாரத்தின் மேல் பொருட்களை ஏற்றிய போது, 64 வயதான உள்ளூர் தொழிலாளி ஏணியில் இருந்து விழுந்தார். அவர் ஏப்ரல் 23 அன்று மரணமடைந்தார்.
ஏப்ரல் 22: 32 வயதான இந்திய ஊழியர் ஒருவர், தனாஹ் மேராவில் உள்ள கட்டுமானப் பொருட்களை அகற்றும் இடத்தில் ஓய்வெடுக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றபோது, wheel loader மோதி உயிரிழந்தார்.
ஏப்ரல் 27:
யிஷுன் இண்டஸ்ட்ரியல் ஸ்ட்ரீட் 1 இல் உள்ள ஒரு கட்டிடத்தின் driveway வளைவில், prime mover மோதியதில் 39 வயதான இந்தியர் ஒருவர் பலியானார்.
ஏப்ரல் 27: நெய்தல் சாலையில் உள்ள ஒரு வேலைத் தளத்தில், 42 வயதான வங்காளதேச தொழிலாளி ஒருவரின் தலையில் மீது Steel beam மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏப்ரல் 30: 49 வயதான இந்திய கட்டுமானத் தொழிலாளி ஒருவர், காற்று மற்றும் கனமழை காரணமாக தன்னுடைய container office-ல் ஏற்பட்ட விபத்தில் பலியானார்.
மே 2: சிங்கப்பூரைச் சேர்ந்த 66 வயதான சிங்கப்பூர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், கெயிலாங் சாலையில் உள்ள கடைவீதின் இரண்டாவது மாடியை ஆய்வு செய்யும் போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.
மே 13: சிராங்கூன் சாலையில் மின்சார சைக்கிளில் சென்ற 54 வயது உணவு விநியோக தொழிலாளி ஒருவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலியானார்.
மே 17: 59 வயதான உள்ளூர் தொழிலாளி ஒருவர் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு செல்லும் வழியில் கடலில் விழுந்து உயிரிழந்தார்.
மே 19: ஜூ கூன் சர்க்கிளில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கூரையை சுத்தம் செய்யும் பணிக்கு தயாராகி கொண்டிருந்த போது 9.5 மீ உயரத்தில் ஸ்கைலைட் மூலம் விழுந்து 49 வயதான உள்ளூர் தொழிலாளி பலியானார்.

மே 24: 59 வயதான உள்ளூர் தொழிலாளி வெஸ்ட் கோஸ்ட் கிரசன்ட்டில் உள்ள ஒரு குடியிருப்பின் கூரையில் நீர்ப்புகாப்பு வேலை செய்யும் போது 37 வயதான வங்காளதேச தொழிலாளி விழுந்து இறந்தார்.
மே 27: டெஃபு அவென்யூ 2ல் உள்ள ஒரு கட்டிடத்தில் டிரெய்லருக்கும் லாரிக்கும் இடையே பெரிய உலோகக் குழாயின் அடியில் சிக்கி 49 வயது தொழிலாளி உயிரிழந்தார்.
ஜூன் 10: 41 வயதான வங்கதேச தொழிலாளி, செராங்கூன் கார்டனில் தரையிறங்கிய ஒரு தனியார் வீட்டின் இரண்டாவது மாடியில், சுவரை இடித்துக் கொண்டிருந்த போது, ஒரு பகுதி சுவர் அவர் மீது இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

ஜூன் 22: Mandai குவாரி சாலையில் உள்ள Home Team Tactical Centre-ல் வேலை செய்யும் இடத்தில் மொபைல் கிரேனின் பகுதிகளுக்கு இடையில் நசுக்கப்பட்டதில் 32 வயதான இந்தியர் இறந்தார். இவரது பெயர் பெரியசாமி ராஜேந்திரன். இவரது மனைவிக்கு நம் தமிழ் சாகா மூலம் ரூ.19,000 நிதியுதவி சேகரித்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 24: புங்கோலில் உள்ள வாட்டர்வே பாயின்ட் ஷாப்பிங் மால் அருகே மின்சார மிதிவண்டியில் பயணித்த 54 வயது உணவு விநியோகிக்கும் ஊழியர் ஒருவர் போக்குவரத்து விபத்தில் இறந்தார்.
ஜூலை 6: 51 வயதான சிங்கப்பூர் கட்டுமான மேலாளர், பாசிர் ரிஸ் டிரைவ் 1 இல் பைல் லோட் சோதனையில் பயன்படுத்தப்பட்ட ஒட்டு பலகையில் இருந்து உடைந்த ஒரு துண்டு மேலே விழுந்ததில் உயிரிழந்தார்.
ஜூலை 7: கீட் ஹாங் லிங்கில் உள்ள BTO தளத்தில் பணிபுரியும் 35 வயதான இந்தியர் ஒருவர், அவர் நின்று கொண்டிருந்த ஃபோர்க்லிஃப்ட் பின்னோக்கி நகர்ந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ஜூலை 20: 55 வயதான சிங்கப்பூர் பயிற்சியாளர், புலாவ் பிரானியில் உள்ள போலீஸ் கடலோர காவல்படையின் தலைமையகத்தில் டிங்கி படகில் இருந்து விழுந்த போது, படகின் மோட்டாரின் propeller தாக்கியதில் இறந்தார்.
ஆகஸ்ட் 3: கிராஞ்சியில் உள்ள ஒரு தனியார் போக்குவரத்து சந்திப்பில், 43 வயதான சீன இழுவை டிரக் டிரைவர், ஒரு பஸ்ஸுக்கும் தூணுக்கும் இடையில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த பட்டியலில், உயிரிழந்த இந்திய ஊழியர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரது உடல்களும் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, சொந்தங்கள் புடை சூழ, ஒப்பாரியுடன் சொந்த ஊர் கொண்டுச் செல்லப்பட்டன. அந்த நாட்கள் உண்மையில் மிகக் கொடுமையானவை.