TamilSaaga

“டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள்” – இறுதிசுற்றுக்கு முன்னேறினர் சிங்கப்பூர் நீச்சல் வீரர் தோ வீ சூங்

டோக்கியோ பாராலிம்பிக்கில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் தோ வீ சூங் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​S 7 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 22 வயதான அவர் டோக்கியோ அக்வாடிக்ஸ் சென்டரில் 29.01 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த போட்டியில் அவர் தனது தனிப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார். மேலும் அவர் சிங்கப்பூரின் தேசிய சாதனையை சமன் செய்தார் என்று சிங்கப்பூர் அணி வெளியிட்ட பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. பாரா ஒலிம்பிக்கில் முதல் முறையாக போட்டியிடும் டோ, தகுதி சுற்றில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். இறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.19 மணிக்கு (சிங்கப்பூர் நேரம்) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் டோ என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ பாராலிம்பிக்கில் நான்கு நிகழ்வுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஏற்கனவே 1 தங்கத்தை வென்று சிங்கப்பூர் பாராலிம்பிக் போட்டிகளில் 50வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts