சிங்கப்பூரில் வேலைக்காக பல மாதங்கள் கஷ்டப்பட்டு டெஸ்ட் அடித்து விடும் ஊழியர்களுக்கு அடுத்து இருக்கும் பெரிய கவலையே கம்பெனி எப்படி கிடைக்கும். நல்ல கம்பெனியாக இருக்குமா? சொன்ன சம்பளம் கிடைக்குமா என பல சந்தேகங்கள் தொடர்ந்து இருக்கும்.
இந்நிலையில், தற்போதுள்ள தகவல்களின் படி சிலருக்கு டெஸ்ட் அடித்த இன்ஸ்ட்யூட்களே கம்பெனியை தேர்வு செய்து விசா எடுத்து கொடுத்து விடுகிறார்கள். அப்படி நீங்க டெஸ்ட் அடிக்க செல்லும் போது இன்ஸ்ட்யூட்கள் கம்பெனியை நாங்களே போட்டு தருகிறோம் எனக் கூறினால் நீங்க என்ன செய்ய வேண்டும். இதுகுறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்காக
சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்து 45 முதல் 60 நாட்கள் கஷ்டப்பட்டு டெஸ்ட் அடித்து விட்டு பலர் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். அதிலும் ஆகஸ்ட், செப்டமர் மற்றும் அக்டோபர் மாதங்களில் டெஸ்ட் அடித்திருப்பவர்களுக்கு 2 அல்லது 3 வாரத்தில் ரிசல்ட் வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், அந்த ஊழியர்களுக்கு கம்பெனியே இன்ஸ்ட்யூட்டை போட்டு தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முன்பெல்லாம் நீங்கள் உங்களுக்கு தெரிந்த நல்ல ஏஜென்ட் மூலம் ஒரு இன்ஸ்ட்யூட்டை தேர்ந்தெடுக்கலாம். அங்கு படித்து விட்டு டெஸ்ட் முடித்தால், ஏஜென்ட் உங்க சான்றிதழை வாங்கி கம்பெனி போட்டு தருவார்கள். ஆனால் இப்போது இருக்கும் கோட்டா பிரச்னையால் டெஸ்ட்டுக்கு வருபவர்களுக்கு தாங்களே கம்பெனி போட்டு தருவோம் என சில இன்ஸ்ட்யூட்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இன்ஸ்ட்யூட்களில் சேரும் போதே கம்பெனி உங்கள் ஏஜென்ட் மூலம் போட்டு கொள்வதாக கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கு சம்மதம் தெரிவிக்கும் இன்ஸ்ட்யூட்கள் தாராளமாக சேர்ந்து கொள்ளலாம். ஆனால் சில இன்ஸ்ட்யூட்கள் பிரபலமாக இருப்பார்கள். அவர்கள் நாங்களே தான் கம்பெனி போட்டு தருவோம் எனக் கூறினால் ஒப்புக்கொள்ளலாம். இந்த இன்ஸ்ட்யூட்களின் அவர்களின் பெயருக்காகவே நல்ல கம்பெனியை தேர்வு செய்வார்கள்.
ஆனால் சில இன்ஸ்ட்யூட்கள் இதில் விதிவிலக்காகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களை ஏமாற்ற முடியாது என்றாலும் வேலை சரியாக அமையாமல் இருந்து விடும். இந்த பிரச்னையை தவிர்க்க கம்பெனியை ஓகே செய்வதற்கு முன் என்ன கம்பெனி, சம்பளம் எவ்வளவு என்பது குறித்து உங்களிடம் கேட்ட பிறகே விசா போட வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லி விடுங்கள். உங்களுடைய துறைகளில் மட்டுமே வேலை வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி விடுங்கள்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் தொழில் தொடங்க ஆசையா? எப்படி தொடங்கலாம் என குழப்பமா? அதற்கு பதில் EntrePass தான்… இத படிங்க நீங்களும் முதலாளி ஆகிடலாம்…
இன்ஸ்ட்யூட்டில் சொல்லும் கம்பெனி பெயரினை BCA வெப்சைட்டில் ஒன்றுக்கு இருமுறை செக் செய்து கொள்ளலாம். உங்க சம்பளம் போதுமானதாக இருக்கா என்பதை பார்த்து கொள்ளுங்கள். முக்கியமாக ஓவர் டைம் இருக்க வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் ஓவர் டைம் இருந்தால் மட்டுமே உங்களால் சிங்கப்பூரில் நல்ல சம்பளம் எடுக்க முடியும். இதெல்லாம் ஓகே ஆகும் பட்சத்தில் IP அப்ளே செய்வார்கள். விசா வந்தவுடன் இன்ஸ்ட்யூட்டில் கேட்டு விசா பேப்பரினையும் தெளிவாக படித்து விடுங்கள்.
சிங்கப்பூரில் வேலைக்கு வந்திருக்கும் உங்களுக்கு சொன்ன வேலையை விட வேறு வேலை கொடுத்தால் கம்பெனியில் இதுகுறித்து பேசுங்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை கொடுக்கவில்லை என்பதை ஹெச்.ஆர்ரிடம் தெளிவாக எடுத்து சொல்லுங்கள். அவர்கள் தரப்பு உங்களுக்கு சரியான விளக்கம் கொடுக்கும். அதிலும் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் MOM சென்று கை ரேகை வைப்பதை செய்யாதீர்கள். அப்படி நீங்கள் நோ சொல்லும் பட்சத்தில் கம்பெனியே உங்களை ஏஜென்ட்டிடம் பேச வைக்கும். அவர் வந்து உங்களிடம் இதுகுறித்து பேசி சரி செய்யவேண்டும்.
ஆனால் அதை விட்டு நீங்க சொந்த நாட்டிற்கு திரும்ப யோசிக்காதீர்கள். வேலை பிடிக்கவில்லை என்றாலும் முதலில் சில மாதங்கள் அந்த கம்பெனியிலேயே தொடருங்கள். பின்னர், வேறு கம்பெனிக்கு மாறுவதே இதற்கு தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.