இந்தூர் சனிக்கிழமை (அக்டோபர் 23), சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) சிங்கப்பூரின் மிகப்பெரிய Therapeutic தோட்டத்தை (Therapeutic Garden என்பது மக்களின் உடல், உளவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட வெளிப்புற இடம்) ஜூரோங் லேக் கார்டனில் திறந்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 3,100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, சிங்கப்பூரர்களுக்கு இயற்கையின் நன்மையை உணர்த்தி பசுமையின் நன்மைகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும், மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பிரத்யேக பிரிவுகளைக் கொண்டுள்ளது இந்த பூங்கா என்பது இதன் சிறப்பம்சம். இதனை தேசிய வளர்ச்சிக்கான துணை அமைச்சர் இந்திராணி ராஜா திறந்து வைத்தார்.
இந்த பூங்கா ஜூரோங் லேக் கார்டன்ஸ் அறிவியல் அடிப்படையிலான கொள்கைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பார்வையாளர்கள் இயற்கையுடன் தொடர்புகொள்வதற்கும் அவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்கும் பிரத்தேயகமாக திட்டமிடப்பட்டுள்ளது. லேசான மன இறுக்கம் மற்றும் ADHD மற்றும் டிமென்ஷியா கொண்ட முதியவர்கள் உட்பட குழந்தைகள் மற்றும் முதியவர்களின் தேவைகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைப்பு கூறுகள் இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளன.
Nparks வெளியிட்ட முகநூல் பதிவு
தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் மன அறிவியல் மையத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 2016ம் ஆண்டில் NParks நடத்திய ஆய்வில், ஆரோக்கியமான முதியோராக இருந்த பங்கேற்பாளர்களின் பொது நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை 15 நிமிட சிகிச்சையில் தோட்டக்கலைத் திட்டம் மேம்படுத்தியது என்று கூறப்படுகிறது.
இந்த பூங்காவின் குழந்தைகள் பிரிவில் சக்கர நாற்காலிக்கு ஏற்ற ஊர்ந்து செல்லும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியும், பகலில் புற ஊதா ஒளியை உறிஞ்சும் தாதுக்களால் ஆன பாதைகளைக் கொண்ட ஒரு தளமும் அடங்கும், இது இரவில் மென்மையாக ஒளிர தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கான பகுதியுடன் இணைந்திருக்கும் ஒரு பட்டாம்பூச்சி தோட்டம் இந்த இடத்திற்கு ஒரு நிறைவை அளிக்கின்றது. ADHD போன்ற சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகள் விளையாட இது உதவுகிறது.