TamilSaaga

“குறுகிய காலத்தில் அதிகரித்த விற்பனை” : சிங்கப்பூரில் பல இடங்களில் வலம்வரும் “டெஸ்லா”

சிங்கப்பூரில் கடந்த சில வாரங்களாக பல வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சந்தேகித்ததை “ராய்ட்டர்ஸ்” செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் 2021ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சிங்கப்பூரின் சாலைகளில் இப்போது மொத்தம் 487 டெஸ்லாக்கள் இங்கும் அங்கும் வலம்வருகின்றது. நீங்கள் சிங்கப்பூர் சாலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்த அளவிலான டெஸ்லா மாடல் கார்களை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்பொது இந்த கார்களின் ஆதிக்கம் சிங்கப்பூரில் அதிகமாக தொடங்கியுள்ளது.

மிகவும் அடிப்படையான டெஸ்லா மாடல் 3 கார்கள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 2,00,000 வெள்ளிக்கு விற்பனை ஆகின்றது. இது தவிர கூடுதலாக பதிவுக் கட்டணம் (ARF) மற்றும் COE (உரிமைச் சான்றிதழ்) ஆகிய விஷயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அமெரிக்காவில் மலிவான மாடல் டெஸ்லா கார்கள் US$40,000 டாலருக்கு அதாவது நமது சிங்கப்பூர் மதிப்பில் 53,800 வெள்ளிக்கும் குறைவாகவே விற்பனையாகிறது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள அதிகாரப்பூர்வ விற்பனை அலுவலகத்திலிருந்து காரைப் பெற விரும்புவோருக்கு இந்த விலை ஒரு பொருட்டாகக் இருப்பதாக தெரியவில்லை. சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் 2021ல், 314 டெஸ்லாக்கள் இங்கு பதிவு செய்யப்பட்டன. உலக அளவில் பிரபலமான அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பாளரான ‘டெஸ்லா’ தனது முதல் ஷோரூமை சிங்கப்பூரில் உள்ள ராஃபிள்ஸ் சிட்டியில் கடந்த ஜூலை 30 அன்று திறக்கப்பட்டது. சுமார் 143 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஷோரூம், One Assemblyக்குள்ளேயே முதல் தலத்தில் உள்ளது.

மேலும் இந்த ஷோரூமில் தற்போது டெஸ்லா மாடல் 3 மற்றும் நான்கு கதவுகள் கொண்ட செடான் மாடல் கார்கள் இடம்பெறும், மேலும் இது தற்போது சிங்கப்பூரில் விற்பனைக்கு கிடைக்கிறது மேலும் இந்த விலை உரிமைச் சான்றிதழை சேர்க்காமல் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts