TamilSaaga

இப்படியும் ஒரு சாதனையா? 12 மணிநேரத்தில் 919 ஆண்களுடன் உடலுறவு – தனது நீண்ட நாள் கனவை நனவாக்கிய பெண்?

என்னடா கலர் கலரா ரீல் விடுறீங்க!!?… என்று பார்த்த உடனேயே கேட்க வைக்கும் டைட்டில் இது. அது எப்படி திமிங்கலம்.. ஒருத்தரால இத்தனை பேர் கூட.. அதுவும் 12 மணி நேரத்துல.. என்ற விஞ்ஞான ரீதியிலான அடுத்த கேள்வியும் எழாமல் இல்லை.

இன்னைக்கு சண்டே ஆயிற்றே.. கொஞ்சம் S-Pass, E-Pass, Flight Tickets போன்ற சமாச்சாரத்துக்கு கொஞ்சம் லீவு விடலாம் என்பதால், நமது செய்தி குழு தேடிக் கண்டறிந்த இந்த அறிய பொக்கிஷத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்தவர் நடிகை லிசா. 44 வயதான இவர் ஹாலிவுட் நடிகை தான். ஆனால், ஹாலிவுட்டின் ஆபாச பட நடிகை. இவருக்கு தன் துறை சார்ந்து ஏதாவது ஒரு பெரிய சாதனை நிகழ்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாம். (சரி.. இருந்துட்டு போகட்டும்.. விஷயத்துக்கு வாங்க)

அப்படி என்ன சாதனை செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அதிக நபர்களுடன் உடலுறவில் ஈடுபடலாமே என்று ஐடியா கிடைக்க, பட்டென காரியத்தில் இறங்கியிருக்கிறார்.

இதற்காக எந்தவித நோய்களும் இல்லாத ஆரோக்கியமான ஆண்கள் தேர்வு செய்யப்பட, மேடம் பிராசஸில் ஈடுபட, 12 மணி நேரத்தில் 919 நபர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறுகிறது GIDI என்ற தனியார் ஊடகம். அது குறித்த செய்தியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதெப்படி திமிங்கலம்..? என்ற சந்தேகம் நமக்கு இங்கே தான் எழுகிறது. அதாவது, ஒவ்வொரு 45 வினாடிகளுக்கு ஒரு ஆணுடன் பாதுகாப்பாக உடலுறவில் ஈடுபட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி உண்மையா? பொய்யா? என்று இதற்கு மேல் ஆராய நமக்கும் மனமில்லாத காரணத்தால் கனத்த இதயத்துடன் முடித்துக் கொள்கிறோம்.

சிங்கப்பூர் ஊழியர்களின் கவுண்டமணி மாடுலேஷன் மைண்ட் வாய்ஸ்: எனக்கே இன்னைக்கு ஒரு நாள் தான் லீவு தர்றாங்க. அதுலயும் இந்த மாதிரி எசகுபிஸகா நியூஸ் போட்டு, நம்மள நிமமதியா இருக்க விட மாட்டேங்குறானுங்க.. இன்னைக்கு நாள் முழுசும், 12 மணி நேரத்துல 919 பேரோட எப்படி-னு மண்டை யோசிச்சு யோசிச்சு இந்த நாளே உருப்புடாம போகப்போவுது. நல்லா வருவீங்கடா!!

Related posts