TamilSaaga

கடலூரில் இருந்து கனவுகளுடன் சிங்கப்பூர் வந்த ‘பெரியசாமி ராஜேந்திரன்’… நேற்று கிரேன் விபத்தில் உடல் நசுங்கி பலியான சோகம் – கலங்க வைக்கும் புகைப்படம்

சிங்கப்பூரில் நேற்று (ஜூன்.22) பணியிடத்தில் மொபைல் கிரேனில் சிக்கி பலியான வெளிநாட்டு ஊழியர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

சிங்கப்பூரில் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், நேற்று காலை 10.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மனிதவளத்துறை அமைச்சகம் (MOM), இந்தியாவைச் சேர்ந்த 32 வயதான அந்த ஊழியர், கிரேனின் சேஸின் அடியில் அமைந்துள்ள கருவிப்பெட்டியில் இருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, கிரேன் கடிகார திசையில் திரும்பி அவரை நசுக்கியதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த ஊழியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ தளத்துக்கு கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவலில், அந்த ஊழியரின் பெயர் பெரியசாமி ராஜேந்திரன் (வயது 32) என்பது உறுதியாகியுள்ளது. இவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து காலை 10.20 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, ஹ்வா யாங் இன்ஜினியரிங் (Hwa Yang Engineering) நிறுவனத்தில் தான் பெரியசாமி ராஜேந்திரன் பணிபுரிந்து வந்துள்ளார். விபத்துக்கு பிறகு Khoo Teck Puat மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார். பிறகு, மருத்துவமனையிலேயே அவர் இறந்துள்ளார்.

இந்நிலையில், விபத்து குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. மேலும் அந்த இடத்தில் அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு அமைச்சகம் CCDC க்கு அறிவுறுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts