யாருக்கு தாங்க அம்மாவ பிடிக்காது. இந்த உலகத்திலேயே நம்மள வெறுக்காத ஒரே ஜீவன் அம்மா தான். அப்படிப்பட்ட அம்மா இறந்தா யாரா இருந்தாலும் தாங்கவே முடியாது. அந்த சோகம் பலருக்கும் பல வருடம் கடந்தும் இருந்துக் கொண்டே தான் இருக்கும். ஒரு சிலர் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அது தான் தமிழ்நாட்டை சேர்ந்த பென்னிஸ் குமாரின் நிலையாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவருக்கும் மனைவி மல்லிகாவிற்கு பென்னிஸ் குமார் என்ற ஒரே மகன் தான் இருந்தார். ஒற்றை பிள்ளை என்பதால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டார். கடந்த வருடம் உடல்நல கோளாறால் மல்லிகா உயிரிழந்து விட்டார்.
அம்மாவின் இழப்பை பென்னிஸால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. யாருடனும் பேசாமல் எப்போதும் தனிமையிலேயே வாழ்ந்து வந்திருக்கிறார். பென்னிஸ் சின்ன பிள்ளை என நினைக்க வேண்டாம். தமிழ்நாட்டில் இருக்கும் பாரதியார் பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படிக்கும் மாணவர். விடுதியில் இருந்த போதும் பெரிதாக யாருடனும் ஓட்டாமலே இருப்பாராம்.
டிசம்பர் 1ந் தேதி வகுப்புக்கு போகாமல் தலை வலிப்பதாக கூறி ரூமிலேயே ரெஸ்ட் எடுக்க செல்வதாக நண்பர்களிடம் சொல்லி அனுப்பி விடுகிறார். வகுப்பு முடிந்து வந்த மாணவர்கள் அறை கதவை தட்டினாலும் திறக்கவே இல்லையாம். உடனே அருகில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்ததில், பென்னிஸ் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டு இருந்து இருக்கிறார்.
தகவலறிந்து வந்த காவல்துறை அவர் அறையில் தற்கொலைக்கான கடிதத்தினை கண்டறிந்துள்ளனர். அதில் எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. வீட்டில் தற்கொலை செய்ய பிடிக்கவில்லை. அதனால் தான் இங்கு செய்தேன். இதற்கும் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்துக்கு சம்மந்தம் இல்லை என எழுதப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து அவரை உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்களாம். ஒரே வருடத்தில் மனைவி மற்றும் மகனை இழந்து சொல்ல முடியாத துயரத்தில் நின்ற ஜார்ஜை பார்த்து அங்கிருந்தவர்கள் கதறினர்.