சிங்கப்பூரில் கடந்த வருடம் பணியிடத்தில் உயிரிழந்த தமிழக ஊழியர் பெரியசாமி ராஜேந்திரனின் மரணம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவரது குடும்பத்துக்கு நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளம் மூலம் நமது வாசகர்கள் மூலம் முடிந்தளவு நிதி திரட்டி ரூ.18,000 கொடுக்கப்பட்டு ஓராண்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை நினைத்து பெருமை கொள்கிறது நமது தமிழ் சாகா நிறுவனம்.
சிங்கப்பூரின் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், கடந்த ஆண்டு ஜூன் 22ம் தேதி காலை 10.15 மணியளவில் ஒரு பணியிட விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிரேனில் சிக்கி இறந்தவர் தான் ராஜேந்திரன் வயது வெறும் 32.
7 மாத கைக்குழந்தை, 13 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள், 30 வயதில் மாமனார் மற்றும் மாமியார் நிழலில் வாழும் ஒரு மனைவி என்று ஒரு மிகப்பெரிய குடும்பத்தை தனியே தவிக்கவிட்டு சென்றார் ராஜேந்திரன். அப்போது ராஜேந்திரனின் உறவினர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜேந்திரனின் குடும்பத்தை சந்தித்து அவர்களின் நிலையை நமது தமிழ் சாகா செய்தி குழு கேட்டறிந்தது.
மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி
பிறகு நமது “தமிழ் சாகா செய்தி குழு” வாயிலாக சுமார் 18,000 ரூபாய் நேரடியாக ராஜேந்திரனின் மனைவி சத்யாவின் வங்கி கணக்கில் பல நல்ல உள்ளங்களால் அனுப்பப்பட்டது. உண்மையில் உதவிக்கரம் நீட்டுவதில் தமிழர்களுக்கு நிகர் தமிழரகளே என்பதை நிரூபித்துள்ளனர் நமது சிங்கை வாழ் தமிழர்கள்.
தங்களுக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறும் வகையில் இறந்த ராஜேந்திரனின் மனைவி சத்யாவின் சித்தப்பா மற்றும் சித்தி ஒரு காணொளியை நமது தமிழ் சாகா செய்தி குழுவிற்கு அனுப்பினர். இந்த சம்பவம் நடைபெற்று தற்போது ஒருவருடம் ஆகிவிட்டது. தற்போது பெரியசாமி ராஜேந்திரன் குடும்பத்தினர் ஓரளவு அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்திருப்பார்கள் என நம்புவோம்.