புதிதாக ஒரு நாட்டுக்கு செல்வோரின் அடையாளமே அவர்கள் வைத்திருக்கும் பாஸ்போர்ட் தான். அதை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தொலைந்து விடும் பட்சத்தில் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இருந்தும் அறியாமையில் கூட இப்படி நடக்கும் போது உடனடியாக மேலதிகாரிகளிடம் கூறி நம்மை காத்துக்கொள்வதும் முக்கியம்.
இதேப்போல,சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சிங்கப்பூர் வந்திருக்கிறார் பாண்டியன் மெய்ஞானமூர்த்தி. கட்டடக தொழிலாளி வேலைக்கு வந்திருக்கும் பாண்டியன் இந்த மாதமே சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார்.
சில நாளிலேயே அவரின் பாஸ்போர்ட்டை சிங்கப்பூர் toh guan road-ல் கீழே இருந்து எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிரபலமான பேஸ்புக் பேஜ் ஒன்றில் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. அதில் இருந்த கம்பெனி விலாசத்தை குகூளில் தேடிய நெட்டிசன்கள் தொலைப்பேசி மூலம் அடுத்த சில மணித்துளிகளில் அவரிடம் பாஸ்போர்ட்டினை ஒப்படைத்தனர். இதை அந்த போஸ்ட்டிலேயே தொழிலாளரின் கம்பெனியை சேர்ந்த ஊழியரே உறுதி செய்து, அதற்கு உதவியவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
வேலைக்காக சிங்கப்பூர் வந்த தொழிலாளியின் வாழ்க்கையே அந்த பாஸ்போர்ட் தான் எனும் பட்சத்தில் அதை கண்டுபிடிக்க உதவிய இளைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்க தான் வேண்டும். சாதாரண போஸ்ட் என கடந்து செல்லாமல் தொழில்நுட்பத்தினை சுலபமாக பயன்படுத்தி பாஸ்போர்ட்டினை அவரிடம் சேர்த்தது மிகப்பெரிய செயல் தான். இதுமாதிரி சூழல் தான் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் நமக்கு முக்கியம் என்பது உணரப்படுகிறது.