கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிங்கப்பூர் குறித்த பல முக்கிய செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு அளித்து வருகின்றது நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தித்தளம். செய்திகளை வழங்குவதுமட்டுமல்லாமல் நமது சமுதாயத்திற்கு தேவையான நல்ல பல விஷயங்களை உங்கள் ஆதரவோடு தொடர்ந்து செய்து வருகின்றது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்திக்குழு.
சில தினங்களுக்கு முன்பு அண்டை நாடான இந்தியாவில் உள்ள சென்னையில், சாந்தோம் என்ற பகுதியில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாத பிள்ளைகளுக்காக நடத்தப்படும் அறக்கட்டளை நிறுவனத்திற்கு ரூ.50,000 மதிப்புள்ள கணினியை நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் வாயிலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இங்கு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில் இறந்த தமிழர் குமரவேல் ராஜா அவர்களின் குடும்பத்தாருக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனம் ஆவலோடு உள்ளோம் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிரோம்.
கடந்த 2021ம் ஆண்டு நாம் மறக்கவே முடியாத சம்பவங்களில் ஒன்றாக மாறியது தான் தமிழர் குமரவேல் ராஜாவின் மரணம். திருப்பத்தூர் மாவட்டம், உமையப்பநாயக்கனூரை சார்ந்த ராஜா அப்புக்கவுண்டரின் மகன் தான் குமரவேல் ராஜா.
சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த நிலையில் பணியிடத்திலேயே கடந்த 03.11.2021 அன்று உயிர்பிரிந்தது. அவரது உடலை எப்படி இந்தியாவிற்கு கொண்டு வருவது என்று புரியாமல் உறவினர்கள் தவித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோவின் மகன் துரை வைகோ சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர் யாஸீன் மூலம், மருத்துவமனை விதிகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை முடித்து, இறந்துபோன குமரவேல் ராஜா உடலை, நவம்பர் 6ம் தேதி 2021 காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் கொண்டு வந்து சேர்த்தார்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், குமரவேல் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய குடும்பம் தற்போது என்ன நிலையில் உள்ளது? அவர்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்படுகிறதா? என்பது குறித்து நமது தமிழ் சாகா சிங்கப்பூர் நேயர்களுக்கு தகவல்கள் தெரியவந்தால் எங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிச்சயம் எங்களால் இயன்ற உதவியை அவர்களது குடும்பத்தினருக்கு செய்ய ஆவலோடு இருக்கின்றோம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் : tamilsaaga@gmail.com