TamilSaaga

சிங்கப்பூர் NTUC தலைவராக தமிழ் வம்சாவளி பெண் தனலட்சுமி நியமனம்..!

சிங்கப்பூரின் என் டி யு சி எனப்படும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கே தனலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சுகாதார பராமரிப்பு துறை ஊழியர் அணியின் தலைவராக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருக்கு வயது 57 ஆகும்.

தொழிற்சங்கத்தை சேர்ந்த 450 ஊழியர்கள் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் திருமதி தனலட்சுமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதற்கான தேர்தல் ஆனது கடந்த நவம்பர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ரகசியமாக நடத்தப்பட்டது. இவர் ஏற்கனவே என் டி யு சி நிர்வாக குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும் என் டி யு சி யின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் .ஆனால் இவர் தலைவராக வைப்பது இதுவே முதல் முறையாகும்.

இதைத் தவிர யூசி உறுப்பினர் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழுவில் 40 பேர் அடங்குவர். அது மட்டுமல்லாமல் என் டி யு சி துறையின் செயலாளராக திரு அரசு துரைசாமி என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts