தைவானின் முதியோர்கள் இல்லம் ஒன்று Mid-Autumn festival event-ஐ எக்குத்தப்பாக நடத்தி பெரும் சர்ச்சையில் இப்போது சிக்கியுள்ளது.
தைவான் அரசே நடத்தும் இந்த முதியோர்கள் இல்லத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த இல்லத்தில் தங்கியுள்ளனர். இவர்களை கவனித்துக் கொள்ள, அரசு மாதாமாதம் அந்த இல்லத்துக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
இந்நிலையில், அங்கு சமீபத்தில் ‘Mid-Autumn festival-க்காக நடந்த நிகழ்ச்சியில், இளம் மாடல் ஒருவர் எக்குத்தப்பாக, எசகுபிசகாக நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி விவாதப் பொருளாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதியவர்கள் சிலர் வீல் சேர்களில் அமர்ந்துள்ளனர். அவர்கள் முன் டூ பீஸ் உடையணிந்த பெண் ஒருவர் தரையில் அமர்ந்து, தன் கால்களை விரித்து காட்டுவதில் இருந்து அந்த வீடியோ தொடங்குகிறது.
இந்த நிகழ்வின் போது எப்படியும் 12 முதியவர்கள் அங்கு இருந்திருப்பார்கள். அதில், குறிப்பாக ஒருவரது வீல் சேர் அருகே சென்ற அந்த பெண், வீல் சேரை பிடித்துக் கொண்டு அந்த முதியவரின் முகத்துக்கு அருகே தன் மார்பகத்தை கொண்டுச் சென்று காண்பிக்கும் காட்சிக்கும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
பிறகு, அந்த பெண் முதியவரை தாங்கிப் பிடித்து, அவரது ஒரு கையை தன் மார்பகத்துக்கு கொண்டுச் செல்கிறார். பிறகு, அந்த முதியவர் தனது இரண்டு கைகளாலும் அப்பெண்ணின் மார்பகத்தை பிடித்து மகிழ்கிறார்.
இறுதியில் அந்த பெண், தனது உடலை முதியவருக்கு ஏதுவாக வளைத்து, தனது கழுத்து, மார்புகள், இடுப்பு, கால்களுக்கு இடையில் என்று அனைத்து உறுப்புகளையும் அந்த முதியவரை தொட வைப்பது போன்ற காட்சிகளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.
கடந்த செப்.9ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட 35 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, சுமார் 27 மணி நேரத்தில் 6,500-க்கும் அதிகமான ஷேர்களை பெற்றுள்ளது. 9,500க்கும் மேற்பட்டோ தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த அத்தனை சம்பவங்களையும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ வைரலாக தற்போது அந்த முதியோர் இல்லம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. நடத்த சம்பவத்துக்கு ‘எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், “15 நிமிடங்கள் நடந்த இந்த நடனத்தின் போது, நடனமாடிய பெண் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்” என்றும் அந்த முதியோர் இல்லாம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.