$200-500 சிங்கப்பூர் டாலர்கள் ஒரு நாளைக்கு வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என தொடர்ந்து உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். உங்களுக்கும் இப்படி ஒரு மெசேஜ் வந்து அதற்கு நீங்கள் பணம் கட்டலாம் என முடிவெடுத்து இருந்தால் முதலில் இதை படிங்க.
இப்படி வரும் மெசேஜ்கள் மீது 3,573 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்த மாதிரியான வேலை மோசடிகளால் குறைந்தது $58.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர் இழந்துள்ளது.
குறிப்பாக இந்த மாதிரியான வேலை மோசடிகள் நடப்பதற்கு காரணமாக எளிதாக கிடைக்கும் வேலை போன்றே அமைந்து இருக்கும். சந்தேகத்து இடமின்றி வேலை செய்ய இருப்பவரை “விரைவாக பணக்காரர் ஆக்குவதற்கான வழி என்ற ஆசையை தூண்டுகிறது”. ஆனால் உண்மையில், வேலை மோசடிகள் எளிமையான வழியில் நடக்கிறது.
மோசடி செய்பவர்கள் தங்கள் சலுகைகளை ஏமாறுபவர்களுக்கு கொடுக்கும் போது உறுதியானதாகவும், நம்பக்கூடியதாகவும் இருக்கும் வகையில் பார்த்து கொள்கிறார்கள். அந்த இடத்தில் பொருளாதார சூழலையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொக்கிகளை போட்டு ஏமாறுகின்றனர்.
வேலை-வாழ்க்கை சமநிலையின் விதிமுறைகளை நான்கு நாள் வேலை, வீட்டில் இருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் செய்கின்றனர். நவீன பணியமர்த்தல் நடைமுறைகளினை பயன்படுத்தி தங்கள் மோசடிகளை வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் உண்மையான வேலை வாய்ப்பு விளம்பரங்கள் போலவே இதுவும் அமைந்து இருக்கும்.
கூடுதலாக, இந்த வேலை மோசடிகளில் பெரும்பாலானவை நீண்ட காலத்தை பயன்படுத்துகின்றன. மோசடி செய்பவர்கள் முதலில் வேலை செய்பவர்களுக்கு சன்மானம் கொடுத்து விட்டு பின்னர் பெரிய தொகையை ஏமாற்றுகின்றனர். சிங்கப்பூரில், ScamShield இரண்டு வழிகளில் மோசடி தாக்குதல்களைத் தடுக்கிறது.
முதலாவதாக, பல்வேறு தரவுத்தளங்களில் அறியப்பட்ட மோசடி எண்கள், செய்திகள், URLகள் மற்றும் பிற அடையாளங்களை தொகுத்து, பயனரின் தொலைபேசியில் வரும் அழைப்புகள் அல்லது SMSகளைத் தடுக்க இந்தத் தகவலைப் பயன்படுத்துகிறது. மோசடிகள் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைவதைத் தடுக்கிறது.
இரண்டாவதாக, மோசடி அடையாளங்காட்டிகளின் இந்தத் தொகுக்கப்பட்ட பட்டியல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையவழி சேவைகள், வங்கிகள் மற்றும் செய்தியிடல் பயன்பாடுகள் ஆகியவை தங்கள் தளங்களில் சாத்தியமான மோசடி செய்பவர்களைத் தடுக்க உதவும். மோசடி செய்பவர்கள் புதிய இலக்குகளைக் கண்டறிவதற்கான அவர்களின் கதைகளையும் முறைகளையும் உருவாக்குவதால், எதிர்கொள்ளும் மோசடிகள் விரைவாக வழக்கற்றுப் போகின்றன. நாமும் தொடர்ந்து நம்மை அப்டேட் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
மனிதவள அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட மிக சமீபத்திய தொழிலாளர் சந்தை அறிக்கை தெரிவிப்பது என்னவெனில், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.2 சதவீதமாக இருக்கிறது. இதன்பொருட்டே பலரும் இதில் ஏமாறுவதாக தெரிகிறது.