கொரோனா பரவல் குறைவதை தொடர்ந்து சிங்கப்பூரில் இந்த ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிங்கபரில் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் வரம்புகளோடு குழுக்களாக மக்கள் கூட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக 117 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி கடற்கரை பூங்கா பகுதியில் 17 பேர் கொண்ட குழுவும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 13 பேர் கொண்ட குழுவும் போலீசாரிடம் சிக்கினார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதற்காக 1800 எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி 6ம் தேதி ஆர்ச்சர்ட் ஹோட்டலில் ஒரே அறையில் 11 பேர் குழுவாக சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியதை சிங்கப்பூர் பயணத்துறைக் கழக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு 1000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பதிவை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.