TamilSaaga

தங்கத்தில் விமானம் வெள்ளியில் ரதம் – சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் கோயில் சிறப்புகள்

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பலரும் கூலித் தொழிலாளிகளாக சிங்கப்பூருக்கு கப்பல் பயணமாக சென்றனர். அப்போது தாங்கள் வணங்க தங்கள் நாட்டு தெய்வம் இல்லையே என்ற ஒரு மனக்குறை அவர்களிடம் இருந்தது.

ஆலய வரலாறு:
1835 ஆம் ஆண்டில் சிராங்கூன் பகுதியில் அந்த கூலித்தொழிலாளிகள் எல்லாம் சேர்ந்து எழுப்பிய கோயில் தான் இந்த வீரமாகாளியம்மன் ஆலயம்.

அதன்பிறகு 1908 ஆம் ஆண்டு சுமார் 150 வெள்ளி செலவில் ரிச்சர்ட் ஓவன் என்பவரிடம் கோயிலுக்கு தேவையான நிலத்தை வாங்கி கோயில் கட்டி எழுப்பப்பட்டது. கூலித்தொழிலாளிகள் தங்கள் வருவாயில் இயன்ற சதவீதத்தை கோயிலுக்காக நிதியாக செலவிட்டனர்.

2012 ஆம் ஆண்டு கோயில் திருப்பணியின் போது அம்பாளின் சன்னதி விமானத்துக்கு தங்கக் கூரை அமைக்கப்பட்டது.

அமைப்பு :
பிரதான தெய்வமாக வீரமாகாளியம்மன் அருள்புரிய உடன் விநாயகர், முருகர், நடராஜர்,பெரிய கருப்பர்,சின்ன கருப்பர்,பைரவர்,மதுரை வீரன், சமயபுரத்தாள், பெரியாச்சி, ராமர் சீதை, நவக்கிரகம் மற்றும் துர்கை போன்ற பல சன்னதிகளும் உள்ளன.
மூன்று நிலைகளை கொண்ட கோயில் இது. இராஜகோபுரம் வழியே உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம் பிறகு சன்னதிகள் காணப்படும்.

கோயிலில் தங்க விமானமும் அம்பாளுக்கு வெள்ளி ரதமும் உள்ளது தனிச்சிறப்பு.

திருவிழாக்கள்:
மாசி பிரம்மோற்சவம் இங்கு விமர்சையாக நடக்கிறது.

நவராத்திரியின் 10 நாட்களும் இங்கு சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.

திருமணக்கூடம், அன்னதானக்கூடம் மற்றும் சமூக நலப்பணிக்காக ஆறு மாடி கட்டிடம் ஆகியவையும் உள்ளன.

Related posts