சிங்கப்பூரின் மெரினா கடலோர விரைவுச் சாலையின் (MCE) கிழக்கு நோக்கிய சுரங்கப்பாதையில் நீர் சார்ந்த தீயணைப்பு அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் (செப்டம்பர் 7) தானாக தொடங்கப்பட்டதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தின் திசையில் கிழக்கு கடற்கரை பார்க்வே நோக்கிய சாலைக்கு செல்லும் வெளியேற்ற இடத்திற்கு அருகில், மதியம் 12.55 மணியளவில் நீர் தெளிப்பான்கள் தானாகவே செயல்பட்டதாக எல்டிஏ தெரிவித்துள்ளது.
மேலும் அந்த சுரங்கப்பாதை சாலையில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 1 மணியளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டதாக எல்டிஏ கூறியது, அதன் பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. தற்போது இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடந்து வருகின்றது.
மேலும் கடலுக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் “தெளிப்பான்கள்” தானாக செயல்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த மார்ச் 2019ல், கிழக்கு கடற்கரை பார்க்வே/கோட்டை சாலை நுழைவாயிலில் தற்செயலாக MCEல் தீ தெளிப்பான்கள் தூண்டப்பட்டன. மேலும் கிழக்கு திசையில் உள்ள MCE சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 2018 ஜனவரியில் தண்ணீர் குழாய் வெடித்ததால் இரண்டு மணி நேரம் மூடப்பட்டது.
அதேபோல கடந்த ஏப்ரல் 2015ல், சுரங்கப்பாதையில் பணிபுரியும் ஒரு ஒப்பந்ததாரர் தற்செயலாக நீர் சார்ந்த தீயணைப்பு அமைப்பை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.