TamilSaaga

18 வருடமாக சிங்கப்பூரில் டிரைவர் வேலை… பாஸ்போர்ட்டில் செய்த தில்லாலங்கடி… வசமாக சிக்கிய தமிழ்நாட்டு ஆசாமி…

சிங்கப்பூரில் போலி பாஸ்போர்ட்டில் கடந்த 18 வருடமாக வேலை செய்து வந்த ராஜேஷ் என்பவரை தமிழ்நாட்டில், காவல்துறை கைது செய்திருக்கிறது.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. சிங்கப்பூரில் வேலை செய்து வரும் அவர், தனது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது. அதை புதுப்பித்து தர வேண்டி தமிழக பாஸ்போர்ட் வழங்கல் அலுவலகத்துக்குக் கடந்த வருடம் ஒரு விண்ணப்பம் வருகிறது. இந்த விண்ணப்பத்துக்கு போலீஸ் விசாரணை செய்து அறிக்கை தரும்படி மாவட்ட எஸ்.பி. தரப்பில் இருந்து அந்த ஏரியா காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது. அதை விசாரிக்க சென்ற போலீசார் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த வீரமுத்து சிங்கப்பூரில் வேலை செய்யவில்லை. அங்குள்ள பால் நிலையத்தில் வேலை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இதை தொடர்ந்து, விசாரித்து பார்த்ததில் வீரமுத்து பெயரில் அவரின் நெருங்கிய உறவினரான ராஜேஷ் சிங்கப்பூரில் 18 வருடமாக ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்த தகவல் குறிப்பிட்ட வீரமுத்துவுக்கே தெரியாமல் இருந்திருக்கிறது. இதனால் ராஜேஷ் மீது ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.

இதை தொடர்ந்து, அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் தமிழகத்தில் இருந்து அனைத்து விமான நிலையத்திற்கும் அனுப்பப்பட்டது. ராஜேஷ் வரும்போது அவரை உடனடியாக கைது பண்ண வேண்டி தயார் நிலையில் இருக்க காவல்துறையினரிடம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதை அறியாத ராஜேஷ் நவ.13ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

இதையடுத்து, விமான நிலையத்திலேயே ராஜேஷ் கைது செய்யப்பட்டார். சேலம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கூறுகையில்,“2002-ம் ஆண்டு நூலகத்தில் பணியாற்றி வந்த வீரமுத்துவின் பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை திருடினேன்.

எனக்கு 18 வயது அப்போது நிரம்பாததால், வீரமுத்து பெயரிலேயே பாஸ்போர்ட் வாங்கினேன். இதன்மூலம் 18 வருடமாக அங்கே டிரைவராக வேலை செய்து வருகிறேன்’’ எனக் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து பாஸ்போர்ட் காலாவதி ஆனதை புதுபிக்க அப்ளை செய்ததாலே தான் சிக்கிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். இதை தொடர்ந்து அவரைத் தமிழ்நாடு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts