சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த செய்தி அதிகம் சென்று சேர வேண்டும்.
ஆம்! சிங்கப்பூரில் தற்போது கோவிட்-19 வைரஸின் துணை கிருமியான XBB வகை வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில்.. அதாவது mid-november-ல் உச்சத்தைத் தொடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் இன்று சனிக்கிழமை (அக். 15) அறிவித்திருக்கிறார்.
அவர் அதை மட்டும் சொல்லவில்லை… இந்த வைரஸின் தாக்கம் காரணமாக, நவம்பரில் ஒரு நாளைக்கு 15,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் கூறியிருக்கிறார். இதுதான் அவர் சொன்னதிலேயே மிக மிக முக்கியமான விஷயம்.
அதுமட்டுமில்லை… இந்த XBB வகை வைரஸின் அவர் எப்படி குறிப்பிடுகிறார் தெரியுமா? இதனை “short and sharp wave” என்கிறார். அதாவது குறுகிய மற்றும் வீரியம் மிகுந்த பாதிப்பாக இது அமையலாம் என்கிறார்.
மேலும், இந்த 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் டெல்டா அலைக்கு முன்னர் கோவிட்-19 தொற்று பாதிக்காதவர்கள் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் Omicron மாறுபாட்டின் இந்த புதிய XBB வகையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அமைச்சரே கூறியுள்ளார்.
புரியும்படி சொல்லவேண்டுமெனில், சிங்கப்பூரில் உங்களுக்கு இதுவரை கோவிட் தொற்றே ஏற்படவில்லை என்றாலும் கூட, இந்த XBB வகை வைரஸால் பாதிக்கப்படலாம் என்று கூறுகிறார்.
இவை அனைத்தையும் இங்கு அவர் நேரடியாக பேசி வெளியிட்ட அறிவிப்புகளாகும். ஆகையால், இந்த செய்தியை சாதாரணமாக கடந்து சென்றுவிட வேண்டும்.
முக்கியமாக சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர்கள், அடுத்த மாதம்…. சாரி.. இந்த நிமிடம் முதலே நீங்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த தொற்று இதுவரை பாதிக்காதவர்களையும் விட்டு வைக்காது என்று அமைச்சர் கூறியதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். பணியிடத்திலும் சரி… நீங்கள் தங்கியிருக்கும் dormitories-களிலும் சரி.. மிக மிக எச்சரிக்கையாக இருங்கள்.
அரசு மாஸ்க் அணிய உத்தரவிடும் வரை காத்திருக்காமல், இந்த நிமிடம் முதலே மாஸ்க் அணிய தொடங்குங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
மிக முக்கியமாக, இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்.