TamilSaaga

Exclusive : “லேசாக சேதமடைந்த Passport” : ரத்தானது திருச்சி – சிங்கப்பூர் பயணம் – திருச்சி விமான நிலையத்தில் தனியே தவித்த பயணி

இந்த பெருந்தொற்று காலத்தில் விமான பயணம் என்பதும் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது, விமான நிலைய அதிகாரிகள் மிகக்கவனமாக ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு தான் பயணிகளை அவர்களுடைய பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிகச்சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய பொருள் சேதத்திற்கும், அதீத மனஉளைச்சலுக்கும் வழிவகுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஒரு பெண்ணின் விமான பயணம். நேற்று முன்தினம் ஜனவரி 7ம் தேதி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து Work Visa வைத்திருக்கும் அந்த பெண் சிங்கப்பூர் புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “மண்ணில் புரண்டது ஒரு குத்தமா?” : சிங்கப்பூர் Pandan பகுதியில் நீர்நாய்களை விரட்டி விரட்டி கொத்திய காகங்கள் – வைரலாகும் Video

பயணத்திற்கு தேவையான Approval, பெருந்தொற்று Negative சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ், விமான டிக்கெட், விசா மற்றும் Passport என்று எல்லாமே முறையாக வைத்திருந்த நிலையில் தனது சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளார் அந்த பெண். சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்து அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து, Boarding முடிந்து சென்ற Immigration சென்றபோது தான் அவர் பாஸ்போர்ட் உள்ளே ஒரு பகுதி தண்ணீரில் நனைந்து லேசாக சேதமடைந்திருப்பதை கண்டுள்ளார்.

பாஸ்போர்ட் சற்று சேதமடைந்திருந்த நிலையில் அவரது முழுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து, முறையாக எல்லா ஆவணங்கள் பெற்றும் அந்த பயணியின் விமான பயணம் ரத்தாகி பெரும் பொருள் இழப்பிற்கும் மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார் அந்த பெண்மணி. அவரை வழியனுப்ப வந்த பெற்றோரும் விட்டு சென்ற நிலையில் தனிமையில் அவர் சிரமப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : Exclusive : “உயிரிழந்த தொழிலாளி ராஜேந்திரன்” : Air India Express மூலம் திருச்சி கொண்டுசெல்லப்பட்ட உடல் – சோகத்தில் உறவுகள்

தமிழகத்தில் நேற்றுமுன்தினமிருந்து இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மறை வரை அமலில் உள்ள நிலையில் அந்த பெண்மணி மீண்டும் வீடு திரும்ப சிரமப்பட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. நாம் மிகச்சிறிய பிரச்சனை என்று கருதும் ஒரு விஷயம் இறுதியில் நம்மை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதை பலர் உணர்வதில்லை. பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து, பல கனவுகளோடு வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பலர் இந்த நிகழ்வை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts