TamilSaaga

சிங்கப்பூர் Clementi பகுதி – வேண்டுமென்றே சண்டையில் இறங்கிய கும்பல் : 6 பேரை கைது செய்த போலீஸ்

சிங்கப்பூரில் கலவர வழக்கில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு 17 முதல் 21 வயதுக்குட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். கடத்த செவ்வாய்க்கிழமை இரவு 10.20 மணியளவில் கிளெமெண்டி அவென்யூ 2ல் இரண்டு குழுக்களுக்கிடையேயான சண்டை குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும் மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட வாக்குவதாகம் காரணமாக சண்டை நடந்தது தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் தப்பிச்சென்ற மற்ற இருவர் போலீஸ் கேமராக்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 17 வயது நபர், இன்று வியாழக்கிழமை அன்று தானாக முன்வந்து “அபாயகரமான வழியில்” காயப்படுத்தியதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரும் நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையில் போலீசார் ஒரு கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், தடியடி அல்லது இந்த தண்டனைகள் அனைத்தும் சேர்த்தும் வழங்கப்படலாம். மேலும் இதுபோன்ற வெறித்தனமான வன்முறைச் செயல்களையும் சட்டத்தை அப்பட்டமாக அலட்சியம் செய்வதையும் காவல்துறை பொறுத்துக்கொள்ளாது என்று காவல்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

Related posts