TamilSaaga

“12 வயதில் துவங்கிய பயணம்” – சிங்கப்பூரில் பிரபலமான Mr Mrs Mohgan பரோட்டா கடை உரிமையாளர் “மோகன் காலமானார்”

சிங்கப்பூரில் Joo Chiat பகுதியில் இயங்கி வரும் பிரபல மொறுமொறு பரோட்டா ஸ்டால் தான் Mr and Mrs Mohgan’s பரோட்டா கடை. மக்கள் பலருக்கு விருப்பன இந்த கடையின் உரிமையாளர் திரு. சோமசுந்தரம் மோகன் காலமான செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 12ம் தேதி Can Eat! Hawker Food என்ற முகநூல் பக்கத்தில் தான் இவருடைய இறப்பு குறித்து முதலில் தகவல் வெளியானது. மேலும் சோமசுந்தரம் மோகன் மாரடைப்பால் காலமானார் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“எப்போவுமே சிங்கப்பூர் ஒரு படி மேலே தான்” : மருத்துவ பரிசோதனைக்காக சகல வசதிகளுடன் களமிறங்கும் Electric Bus – முதியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

இருப்பினும், மோகனின் ப்ராடா ஸ்டால் அமைந்துள்ள டின் யேங் காபி கடையில் உள்ள மற்ற உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், மோகன் உடல்நலம் சரியில்லாத நிலையால் இறந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். 53 முதல் 56 வயது மதிக்கத்தக்க மோகனின் தற்போதைய கடை சுமார் 8 மாதங்களாக அந்த இடத்தில் இயங்கி வருகின்றது. மேலும் இன்று மார்ச் 15 முதல் அந்த கடையும் மூடப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

திரு. மோகன் தனது மனைவியுடன் இணைந்து இந்த ஸ்டாலை நடத்தி வந்தார், காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இவர்களுடைய கடை செயல்படும். சில நேரங்களில் பரோட்டா தீர்ந்துவிட்டால் கடை முன்னதாகவே மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில் அவர் மிகவும் நல்ல மனிதர் என்று அவருடைய வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

12 வயதிலிருந்தே பரோட்டாக்களை தயாரித்து வரும் மோகன், ஆரம காலத்தில் அலெக்ஸாண்ட்ரா பகுதியில் ஒரு கடையை நடத்துவதற்கு தனது தாய்க்கு உதவி வந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 32 வயதாக இருந்தபோது, ​​ஹெய்க் ரோடு உணவு மையத்தில் உள்ள ஒரு பரோட்டா ஸ்டாலில் சமையல்காரராக பணிக்கு சேர்ந்தார். ஆனால் சில வருடங்களில் அந்த கடையும் புனரமைப்பிற்காக மூடப்பட்டதால் அவர் வேலையிழந்தார்.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் காணாமல்போன “தமிழக தொழிலாளியின் Work Permit” – ஒன்றிணைந்து கண்டுபிடித்துத்தர முயற்சிப்போம்!

இறுதியாக கடந்த 2006ம் ஆண்டில், கிரேன் ரோடு காபி ஷாப், போ ஹோ உணவகத்தில் ஜூ சியாட்டில் காலியாக இருந்த ஸ்டால் இடத்தை வாங்கி அவர் தனது ஸ்பெஷல் மொறுமொறு பரோட்டாவை போடத்துவங்கி இறுதியில் உரிமையாளராக மாறினார். சிங்கப்பூர் முழுதும் பிரபலமான மோகனின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts