TamilSaaga

தடை அதை உடை! இந்தியாவை தூக்கி நிறுத்தி புது சரித்திரம் படைத்த 3 பெண்கள் இவர்கள் தான்

மேலே ஏறி வாரோம் இனி ஒதுங்கி நில்லு..! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக புதிய வரலாறை எழுதி உள்ளார்கள் இந்த 3 பெண்கள். இவர்கள் மூவர் தான் இந்தியாவுக்கு 3 பதக்கங்களை சொந்தமாக்கியுள்ளனர்.

யார் இவர்கள்?

விளையாட்டு வீரர்களின் கனவு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வாரம் துவங்கியது. இந்தியாவின் சார்பில் 18 விளையாட்டுகளில் பங்கேற்க 125 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

உலகில் உள்ள அனைத்து வீரர்களின் உட்சபட்ச கனவு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது, பதக்கம் வெல்வது. 2020 ஆம் ஆண்டு நடக்கவிருந்த இப்பெருமைமிகு விளையாட்டு திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணாமாக ஓராண்டு கழித்து, இந்த மாதம் தொடங்கியது

இந்தியா சார்பில் 125 வீரர்கள் கலந்துக்கொண்டனர் அதில் நாடு முழுவதிலும் இருந்து 18 வீராங்கனைகள் பங்கேற்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தருணத்தில் நம் இந்திய நாட்டிற்கு 3 பெண்கள் பெருமை சேர்த்துள்ளனர். இது கொண்டாட வேண்டிய தருணம்.

,டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு (26 வயது) வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடக்கிவைத்தார்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு பதக்கம் வெல்வதே குதிரைக் கொம்பாக இருந்த காலம் உண்டு. போட்டி இறுதியை எட்டும் வரை பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயரைப் பார்ப்பதே அரிதாக இருந்த காலமும் உண்டு. ஆனால், இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வழங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே இந்தியா தன் முதல் பதக்கத்தை பெற்றது. இது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திருந்தது.

இப்போது அடுத்த 2 பதங்களும் உறுதியாகிவிட்டன. அதுவும் பெண்களால் தான். இன்றைய

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதே போல் நேற்றைய ஆட்டத்தில் பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 2-வது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தைஃபேயின் நின்-சின்-சென்னை எதிர்கொண்டார்.

இதில் லோவ்லினா அசத்தலாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மொத்தத்தில் இந்த ஒலிம்பிக்கில் நமது இந்திய பெண்களின் சாதனை உலகம் வியக்கும் செய்தியாக மாறி இருப்பது அனைவருக்கும் சந்தோஷத்தை தரக்கூடிய ஒன்று.

Related posts