TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வரும் தமிழர்களா நீங்க… அப்போ உங்களுக்கு இந்த Rules தெரியணும்… மிஸ் பண்ணாதீங்க அப்புறம் பர்சுக்கு செம வேட்டு தான்!

சிங்கப்பூர் ரொம்பவே சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பதற்கு காரணம் அத்தனை கட்டுப்பாடுகளை காவல்துறை போட்டு அதனை பராமரித்து வருகின்றனர். தவறாக ஒரு விஷயம் செய்து விட்டால் போது பெரிய அளவில் அபராத தொகை இருக்கும். இதனால் நீங்க ஒரு விஷயத்தினை மறந்து விட கூடாது. சிங்கப்பூர் உள்ளே நுழைவதற்கு முன்னர் சில ரூல்ஸினை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கும் சேஃப். உங்க பர்சுக்கும் சேஃப் தான்.

புகைப்பிடித்தலுக்கு சிங்கப்பூர் பெரிய விஷயத்தினை பராமரித்து வருகின்றனர். அதாவது புகைப்பிடிப்பவர்களுக்கென தனி அறை இருக்கும். அதில் இல்லாமல் பொது இடங்களிலோ, புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களிலோ புகை பிடித்தால் அதிகபட்சமாக 1000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு வரணுமா கண்டிப்பா இந்த course பண்ணணும்… Fail ஆனா நாடு திரும்ப வேண்டியது தான்

சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதை சிங்கப்பூர் வரும் போது மறந்து விடுங்கள். காவலர்களிடம் சிக்கினால் உங்களிடம் அதிகபட்சமாக 1000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு விடும்.

வேலைக்கு செல்லும் இளைய சமுதாயத்தினர் ரயிலில் உட்கார்ந்து காலையில் சாப்படுவதை வழக்கமாக தமிழகத்தில் வைத்திருப்பார்கள். சிங்கப்பூர் வேலைக்கு வரும் போது அந்த பழக்கத்தினை மறந்து விடுங்கள். அப்படி நீங்க மெட்ரோ ரயிலில் உட்கார்ந்து சாப்பிட்டால் அதிகபட்சமாக 500 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் போடப்படும்.

சிங்கப்பூரில் சாலை விதிகள் கூட கடுமையாக இருக்கும். சீட் பெல்ட், ஹெல்மெட், வேக கட்டுப்பாடு போன்றவற்றினை சரியாக ஃபாலோ செய்ய வேண்டும். இல்லையென்றால் அபராதம் 500 முதல் 1000 சிங்கப்பூர் டாலர்கள் வரை இருக்கும்.

இதையும் படிங்க: S Pass அப்ளே செய்யும் போது கல்வி டாக்குமெண்ட் இல்லையா? என்ன செய்யலாம்? தெரிஞ்சிக்க இத follow பண்ணுங்க!

குடித்துவிட்டு சண்டை போடும் ஆள் நீங்களாக இருந்தால் உங்களுக்கு சிங்கப்பூர் கொஞ்சம் கஷ்டம் தான். குடித்து விட்டு சண்டை போட்டு சிக்கினால் உங்களுக்கு 5000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். இது இந்திய மதிப்பில் 2.8 லட்சமாக இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.

சாலையினை க்ராஸ் செய்யும் போது அதற்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே க்ராஸ் செய்ய வேண்டும். தவறான இடத்தில் க்ராஸ் செய்தால் உங்களுக்கு 50 முதல் 200 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ரோட்டில் குப்பை கொட்டுவது என்பது ரொம்பவே சதாரணமான விஷயம் தான். ஒரு பொருளின் வெளி கவரை அப்படியே ரோட்டில் எறிவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். சிங்கப்பூர் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் இந்த பழக்கத்தினை விட்டு விடுங்கள். அப்படி நீங்க ரோட்டில் குப்பை போட்டால் உங்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர் முதல் 1000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் போடப்படும்.

டூரிஸ்ட் விசாவில் வந்து வேலை செய்வது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். இப்படி வேலை செய்பவர்களுக்கு அபராதத்துடன் ரோத்தா எனப்படும் சவுக்கடி கொடுக்கப்படும். போதைப்பொருள் வழக்கில் நீங்க சிக்கினால் வாழ்க்கை முடிந்து விடும். கண்டிப்பாக சிங்கப்பூரில் மரண தண்டனை கொடுக்கப்படும்.

தங்குமிடத்தில் அதிக சத்தத்தில் எதுவுமே செய்யக்கூடாது. அதை விட வீட்டினுள் நீங்க துணியில்லாமல் இருந்தாலும் அதுவும் சிங்கப்பூரில் குற்றமாக கருதப்படும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts