TamilSaaga

“மலேசியாவில் இறந்த சிங்கப்பூர் பெண்” : வழக்கு தொடர்ந்த கணவர், நீதிபதி கண்ணன் அதிரடி – எவ்வளவு இழப்பீடு தெரியுமா?

மலேசியாவில் கடந்த 2018ம் ஆண்டு சுற்றுலாப் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு, சுமார் 6,50,000 டாலர் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு முடித்த நிலையில் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது உயர்நீதி மன்றம் என்பது குறிப்பிடத்தக்கது. சேத மதிப்பீட்டில் இந்த மாத தொடக்கத்தில் சுருக்கமான வாய்வழி ஆதாரங்களை வழங்கிய நீதிமன்றம், இறந்த அந்த சிங்கப்பூரரின் ஆயுட்காலம் மற்றும் பணி ஓய்வு வயதைக் கணக்கில் எடுத்துக் கொண்டது.

“சிங்கப்பூரில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு” : பிப்ரவரி மாத வானிலை Update – MSS அறிவிப்பு

விபத்து நடந்தபோது 27 வயதான திருமதி செரினா மாட் இட்ரிஸ், டிசம்பர் 7, 2018 அன்று விபத்து நடந்தபோது, ​​தனது கணவர், அவர்களது ஆண் குழந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் தனது மூன்றாவது திருமண ஆண்டினை கொண்டாடுவதற்காக ஜென்டிங் ஹைலேண்ட்ஸுக்குச் சென்று கொண்டிருந்தார். Pre-school ஆசிரியரான திருமதி செரினா, டபுள் டெக்கர் டூர் பஸ்ஸின் முன் வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் Negeri Sembilan என்ற பகுதிக்கு அருகே அந்த பேருந்து எதிர்வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செரினா பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

இறுதியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்த நிலையில், சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கணவர் அஹ்மத் சுமித்ஜா மசிரன், பேருந்து உரிமையாளர் “டிரான்ஸ்டார் டிராவல்” மற்றும் அப்போது பேருந்தை இயக்கிய டிரைவர் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். டிசம்பர் 2020ல், பிரதிவாதிகள் மரணத்திற்கான 100 சதவீத பொறுப்பை ஏற்றுக்கொண்டனர் மற்றும் சேதங்களை மதிப்பிடுவதற்கான விசாரணைகள் நீதிபதி கண்ணன் ரமேஷ் முன், கடந்த ஆண்டு நடைபெற்றது.

சுதந்திர வாழ்க்கை எப்போது? விலங்குகளா நாங்கள்? – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேதனை.. ஏன்?

சுமார் 1.5 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இறந்த அந்த பெண்ணின் ஓய்வு பெறும் வயது 62 ஆக இருந்திருக்கும் என்பதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த ஆண்டு அவர் மூத்த கல்வியாளராக பதவி உயர்வு பெற்றிருப்பதால் அவரது அதிகரித்த வருமானத்தை அவர் கணக்கில் எடுத்துக்கொண்டார். 27 வயது முதல் 62 வயது வரையிலான அவரது திட்டமிடப்பட்ட வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில், சார்புநிலை உரிமைகோரலை இழந்ததற்காக, $5,22,228ஐ நீதிபதி வழங்கினார்.

மேலும் அவருடைய மகன் இன்னும் மைனர்தான் என்றும், 25 வயதை அடையும் வரை அவர் சார்ந்தவராகவே கருதப்படுவார் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக நீதிபதி கண்ணன் குறிப்பிட்டார். மகன் 25 வயதை அடைந்ததும், அவர் குடும்பத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், செல்வி செரீனாவின் நிகர சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக கழிக்கப்பட வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts