சிங்கப்பூர் அரசு தொடர்ந்து வெளிநாட்டு பங்களிப்புகளை மதித்து வருகிறது என்றும், மேலும் பொருளாதாரத்தை இயக்குவதற்கான அணுகுமுறையை மாற்றாது என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளார். இதனடிப்படையில் வெளிநாட்டு முதலீடுகளை அது இன்னும் வரவேற்கிறது, எளிதாக்குகிறது மற்றும் பாதுகாக்கிறது என்றார் அமைச்சர். இது வெளிநாட்டு திறமைகளுடன் அதன் உள்ளூர் பணியாளர்களை தொடர்ந்து பூர்த்தி செய்யும், மேலும் அதன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் வலையமைப்பை வலுப்படுத்த மற்றும் விரிவாக்க வேலை செய்யும், என்றார்.
இந்த உலகம் வழங்கும் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை நாங்கள் தொடர்ந்து மதிக்கிறோம். அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்வதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று திரு ஓங் மேலும் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள ஐரோப்பிய வர்த்தக சபையின் (யூரோகாம்) உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையில், அவர் இந்த கருத்தினை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் வெளிநாட்டு மனிதவளம் மற்றும் தடையற்ற வர்த்தகம் பற்றிய தற்போதைய விவாதம், அத்துடன் பொருளாதாரத்தில் கோவிட் -19 இன் தாக்கம் உள்ளிட்டவை பேசப்பட்டன.
“சிங்கப்பூரில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன என்றும். நம் சமூகத்தில் வெளிநாட்டினருக்கு எதிரான உணர்வுகளையும் இனவெறியையும் தூண்டும் சில சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் கூறினார்.