toto results : TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது. TOTO மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் Singapore Pools அமைப்பை நடத்தி வரும் சிங்கப்பூர் டோட்டலைசர் போர்டுக்கு செல்கிறது. இந்த தொகை முழுவதும் தொண்டு பணிகள் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
TOTO வரலாறு :
1960களில் சிங்கப்பூரில் பெருமளவிற்கு பரவி இருந்த சட்ட விரோத சூதாட்டங்களை கட்டுப்படுத்தவதற்காக 1968 ம் ஆண்டு TOTO ஏற்படுத்தப்பட்டது. பிறகு 1981 ல் இது கணினி மயத்திற்கு மாற்றப்பட்டது. பல விதமான ஆன்லைன் விளையாட்டுக்களை இது அறிமுகம் செய்தது. தற்போதுள்ள TOTO ஆன்லைன் முறை 2016ம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது.
TOTO விளையாடும் முறை :
- www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்.
- quickpick, சாதாரண பெட், சிஸ்டம் பெட், சிஸ்டம் ரோஸ் என நான்கு வெவ்வேறு வழிகளில் இந்த பந்தயம் நடத்தப்படும்.
- ஒரு லாட்டரியை வாங்கும் நபர் 1 முதல் 49 வரையிலான எண்களில் குறைந்தது 6 எண்களை தேர்வு செய்ய வேண்டும்.
- வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் இந்த லாட்டரி முடிவுகள் வெளியிடப்படும். அதில் TOTO வெளியிடும் வெற்றி எண்கள் மற்றும் கூடுதல் எண்கள் இருக்கும்.
- TOTO வெளியிடும் வெற்றி எண்களில், லாட்டரி வாங்கியவர் தேர்வு செய்த எண்கள் எத்தனை பொருந்துகிறதோ அதற்கு ஏற்ப பரிசுத் தொகை வழங்கப்படும்.
- quickpick முறையில் லாட்டரி வாங்குபவர் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த சவால்களுக்கு பந்தய சீட்டு தேவையில்லை. சாதாரண பெட் முறையில் 1 முதல் 49 எண்களை பந்தய சீட்டில் குறிப்பிடுவதன் மூலம் தேர்வு செய்யப்படுவார். சிஸ்டம் பெட் முறையில் 1 முதல் 49 வரையிலான 7 முதல் 12 எண்களை தேர்வு செய்ய வேண்டும். சிஸ்டம் ரோஸ் முறையில், 1 முதல் 49 வரையிலான 5 எண்களை மட்டும் தேர்வு செய்தால் போதும். 6 வது எண் உறுதி செய்யப்பட்ட வெற்றி எண்ணாகும்.
- பந்தய சீட்டில் சாதாரண, அமைப்பு 7, அமைப்பு 8, அமைப்பு 9, அமைப்பு 10, அமைப்பு 11, அமைப்பு 12, சிஸ்டம் ரோஸ் என பல பிரிவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும்.
- குறைந்த பட்ச பந்தய தொகை 1 சிங்கப்பூர் டாலராகும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் பந்தய தொகையாக செலுத்தலாம்.
- இந்த பந்தயத்தில் மில்லினியம் டிரா, ஹாங்பாவ் டிரா, மூன்கேக் டிரா என பல வகைகள் உள்ளது.
- மொத்தம் 4 குரூப்களாக இந்த பந்தயம் நடத்தப்படும். ஜாக்பாட் எனப்படும் குரூப் 1ல் 6 வெற்றி எண்களும் பொருந்தினால் 38 சதவீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த பிரிவில் குறைந்தபட்ச உறுதித் தொகை 1000 டாலர்கள். குரூப் 2ல் 5 எண்களுடன் கூடுதல் எண்கள் பொருந்தி இருந்தால் 8 சதவீதம் பரிசுத்தொகையும், குரூப் 3ல் 5 எண்கள் பொருந்தி இருந்தால் 5.5 சதவீதம் பரிசுத் தொகையும், குரூப் 4ல் 4 வெற்றி எண்களுடன் கூடுதல் எண்களும் இருந்தால் 3 சதவீதம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
- www.singaporepools.com.sg என்ற இணையதளம் மூலம் ஆன்லைனிலும் விளையாடலாம்.
TOTO விளையாட தகுதி :
- www.singaporepools.com.sg இணையதளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 21 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.
- சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவராகவோ அல்லது சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அடையாள எண் (FIN) வைத்திருக்கும் சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டினராகவோ இருப்பவர் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட தகுதி பெற்றவர்.
- 18 வயதிற்கு கீழ்பட்டவர்கள் சிங்கப்பூரின் எந்த பந்தயத்திலும் பங்கேற்க அனுமதி கிடையாது.
TOTO லாட்டரி துவங்கும் நாள், நேரம் :
புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் சிறப்பு விளையாட்டுகள் நடைபெறும் நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை TOTO லாட்டரியை வாங்க முடியும். வியாழக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அன்று விற்பனை கிடையாது. குலுக்கல் நடைபெறும் நாள் வரை லாட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இன்று (மார்ச் 21) மாலை கூட ஒரு குலுக்கல் நடைபெற உள்ளது. லாட்டரி வாங்க விரும்புபவர்கள் இப்போது கூட வாங்கிக் கொள்ளலாம்.
வெற்றி பெற்றவர்கள் பணம் பெறும் முறை :
5000 டாலர்களுக்கு மேல் பரிசுத் தொகை வென்றவர்களுக்கு மட்டும் ரொக்கமாகவும், காசோலையாகவும் பரிசுத்தொகை வழங்கப்படும். பணத்தை நேரடியாக உங்களின் வங்கி கணக்கிற்கு பெறுவதற்கு singapore pools கணக்கிற்கு நீங்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதோடு உங்களின் குடியுரிமை அல்லது FIN ஆகியவற்றிற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும். singapore pools கிளையிலும் ஆவணங்களை காட்டி விண்ணப்பத்தை அளிக்கலாம். நீங்கள் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நீங்கள் விண்ணப்பித்தால் மட்டுமே உங்களுக்கு பரிசுத் தொகை கிடைக்கும்.
TOTO ஈஸியா வெல்ல வழி இருக்கா?
- random எண்களாக தேர்வு செய்வது சிறப்பானது.
- odd, even என கலந்து எண்களை தேர்வு செய்ய வேண்டும்.
- வெளிப்படையாக தெரியும், அல்லது எளிதில் கணிக்க முடிந்த எண்களை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
- கடைசி 7 முறைகளில் காட்டப்பட்ட எண்களை தேர்வு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
- நியூமராலஜியில் நம்பிக்கை கொண்டவர்கள் தங்களின் பிறந்த தேதி அல்லது அவற்றின் அடிப்படை எண்களை தேர்வு செய்யலாம்.